புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளது. ஒற்றை நாள் தொற்றின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதனுடன் இறப்பு எண்ணிக்கையும் பீதியைக் கிளப்பும் வகையில் மேல்நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் மூன்றாவது நாளாக, ஒரு நாள் தொற்றின் அளவு 4 லட்சத்துக்கும் மேல் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் 4200 கொரோனா (Coronavirus) நோயாளிகள் இறந்துள்ளனர். இது, இதுவரையிலான மிக அதிகமான ஒற்றை நாள் இறப்பு எண்ணிக்கையாகும். 


மூன்றாவது நாளாக 4 லட்சத்தைத் தாண்டியது தொற்றின் எண்ணிக்கை


கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4,01,217 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதனுடன் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,18,86,556 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் சுமார் 37 லட்சம் பேர் சிகிச்சையில் (Corona Treatment) உள்ளனர். 


கடந்த 72 மணிநேரத்தில் தொற்றின் நிலை என்ன?


மே 7, வெள்ளிக்கிழமை, கொரோனா வைரஸால் 4,12,000 க்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. MoHFW இன் படி, நாட்டில் வெள்ளிக்கிழமை 4,14,188 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டனர். 3,915 பேர் இறந்தனர். மே 6 அன்று, முந்தைய 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4,12,262 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டனர். 3980 பேர் தொற்று காரணமாக இறந்தனர்.


ALSO READ: CoWIN போர்ட்டலில் புதிய 4 இலக்க பாதுகாப்பு குறியீடு அம்சம் அறிமுகம்; விபரம் உள்ளே


மே 1 ஆம் தேதி இந்தியாவில் 4,02,351 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு, இப்போதுதான் தொடர்ந்து மூன்று நாட்ளாக ஒற்றை நாள் தொற்றின் அளவு 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 


தமிழகத்தில் (Tamil Nadu) நேற்று ஒரே நாளில் 26,465 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது, இதுவரையிலான அதிகபட்ச ஒற்றை நாள் தொற்று எண்ணிக்கையாகும். இதனுடன் தமிழகத்தில் மொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,23,965 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 197 பேர் இறந்த நிலையில், மொத்த இறப்பு எண்ணிக்கை 15,171 ஆக உயர்ந்துள்ளது.


தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 19832 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 341 பேர் இறந்துள்ளனர். நேற்று 19085 நோயாளிகள் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.


ALSO READ: தமிழகத்தில் மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR