புதுடெல்லி: கொரோனா தொற்று உலகம் முழுவதும் தீயாய் பரவி வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நோயாளிகளுக்கு ஆக்சிமீட்டர் ஒரு உயிர்நாடியாக இருந்து உதவுகிறது. ஒரு நல்ல ஆக்சிமீட்டரின் விலை சந்தையில் இரண்டாயிரம் ரூபாய் முதல் தொடங்குகிறது. இது இதய துடிப்புடன் ஆக்ஸிஜன் அளவையும் பதிவு செய்கிறது.
நம் உடலின் ஆக்ஸிஜன் அளவை நாம் சரியாக தெரிந்துகொள்ள, ஆக்சிஜனின் துல்லியமான ரீடிங்கை பெற, நாம் ஆக்சிமீட்டரை சரியாகப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமாகும். ஆக்ஸிமீட்டரை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த விழிப்புணர்வையும் அரசாங்கம் பரப்பி வருகிறது.
ஆக்சிமீட்டர்
ஆக்ஸிமீட்டர் என்பது இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை சரிபார்க்கும் ஒரு சிறிய இயந்திரமாகும். இது ஒரு துணி அல்லது காகித கிளிப்பைப் போலவே தோற்றமளிக்கும். இதில் உள்ள மிகச்சிறந்த விஷயம் என்னவென்றால் அதை எங்கும் கொண்டு செல்ல முடியும். இந்த காரணத்தால் இது போர்ட்டபிள் ஆக்சிமீட்டர் என்றும் அழைக்கப்படுகிறது.
அமைதியாக இருங்கள்
ஆக்ஸிஜன் அளவை எடுத்துக்கொள்வதற்கு முன், பதட்டப்படாமல், மனதை அமைதியாக வைத்துக்கொண்டு, குறைந்தது 15 நிமிடங்களுக்கு முழுமையான ஓய்வை எடுங்கள்.
நிமிர்ந்து உட்காருங்கள்
நேராக உட்கார்ந்து உங்கள் விரலை இதயத்தின் முன் வைக்கவும். உடலை அசைக்காமல் இருக்க வேண்டும்.
ALSO READ: 6 Minute walk test என்றால் என்ன? கொரோனா நோயாளிகளுக்கு இது ஏன் அவசியம்?
ஆள்காட்டி அல்லது நடு விரலில் பொருத்தி வைக்கவும்
ஆக்ஸிமீட்டரை ஆள்காட்டி அல்லது நடு விரலில் வைக்கவும். இதை விரலில், நகத்திற்கு சிறிது மேலே உள்ள தோலை தொடும் வகையில் பொருத்தவும். இந்த ஆக்சிமீட்டரை வலது அல்லது இடது கையில் ஆள்காட்டி அல்லது நடு விரலில் பொருத்தி ஆக்ஸிஜன் அளவை பார்க்கலாம்.
ஆக்சிமீட்டரை அசைக்காமல் வைத்திருங்கள்
ஆக்சிஜன் அளவைப் பார்க்கும்போது, ஆக்சிமீட்டரை (Oximeter) அசைக்காமல் வைக்கவும். அதை நகர்த்தவோ, அசைக்கவோ கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அசைக்காமல் ரீடிங்கை எடுங்கள்
அமைதியாக இருந்து ஆக்சிமீட்டரில் மேலே உள்ள ரீடிங்கை எடுங்கள்.
ஒரு நாளைக்கு மூன்று முறை ஆக்சிஜன் அளவை சரிபார்க்க வேண்டும்
ஆக்ஸிமீட்டர் கொண்டு ஆக்ஸிஜன் (Oxygen) அளவை ஒரு நாளில் மூன்று முறை எடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆக்ஸிஜன் அளவு 92 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது.
ALSO READ: Corona: CT Scan எடுத்தால் புற்றுநோய் வருமா? பகீர் தகவல்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR