COVID-19 நோயை கட்டுப்படுத்த 79.4 சதவீத செயல்திறனைக் கொண்ட ஸ்பூட்னிக் லைட் ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு (Sputnik Light vaccine) ரஷ்யா அங்கீகாரம் கொடுத்துள்ளது. இந்த செய்தியை ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (RDIF) தெரிவித்துள்ளது.
"ரஷ்ய சுகாதார அமைச்சகம், தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் தொடர்பான கமலேயா தேசிய ஆராய்ச்சி மையம் மற்றும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் ஆகியவை ஸ்பூட்னிக் லைட், ஒற்றை டோஸ் COVID-19 தடுப்பூசியை, ரஷ்யாவில் பயன்படுத்த அங்கீகாரம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளன.
ஒற்றை டோஸ் ஸ்பூட்னிக் லைட் தடுப்பூசி உட்செலுத்தப்பட்ட 28 நாட்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட பகுப்பாய்வு செய்யப்பட்ட தரவுகளின்படி, இந்த தடுப்பூசி 79.4 சதவிகித செயல்திறனைக் காட்டியது. பல இரண்டு டோஸ் தடுப்பூசிகளைக் காட்டிலும் அதிகமாக அதாவது 80% க்கு அருகில் செயல்திறன் கொண்டுள்ளது Sputnik Light" என்று RDIF ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Also Read | Stop Rumors: CT Scan கதிர்வீச்சு மிகவும் லேசானது, புற்றுநோயை ஏற்படுத்தாது
டிசம்பர் 5, 2020 மற்றும் ஏப்ரல் 15, 2021 க்கு இடையில் வெகுஜன தடுப்பூசி திட்டத்தின் போது ஒற்றை தடுப்பூசி போடப்பட்ட ரஷ்யர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஸ்பூட்னிக் லைட்டின் செயல்திறன் கணக்கிடப்பட்டது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஸ்பூட்னிக் லைட் தடுப்பூசி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான கடுமையான நிகழ்வுகளின் சாத்தியத்தை கணிசமாகக் குறைக்கிறது, ஒரே ஒரு ஊசி மட்டுமே தேவைப்படுகிறது. இது கொரோனா வைரஸ் பரவலின் கடுமையான கட்டத்தில் மிகவும் முக்கியமானது கொரோனா வைரஸின், மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை (herd immunity) விரைவாக அடைகிறது, "என்று ஆர்.டி.ஐ.எஃப் இன் தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ் கூறினார்.
Also Read | ஏழு குழந்தைகளை கருதரித்த பெண் பெற்றெடுத்தது 9 குழந்தைகளை!
ஸ்பூட்னிக் லைட் தடுப்பூசி சர்வதேச நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். கொரோனா வைரஸின் தொற்றுநோய் மற்றும் புதிய விகாரங்களுடன் தொடர்ந்து போராடும் நிலையில் பல நாடுகளில் தடுப்பூசிகள் போடுவதை அதிகரிக்க Sputnik Light vaccine உதவும்.
பிப்ரவரி 21 அன்று, கமலேயா மையம் மற்றும் ஆர்.டி.ஐ.எஃப் ஆகியவை ஸ்பூட்னிக் லைட் குறித்த உலகளாவிய செயல்திறன் ஆய்வைத் தொடங்கின.
ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கானா உள்ளிட்ட பல நாடுகளில் 7,000 பேர் பங்கு கொண்ட மூன்றாம் கட்ட மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டது. ஸ்பூட்னிக் லைட் தடுப்பூசி நன்கு படித்த மனித அடினோவைரல் திசையன் தளத்தை (well-studied human adenoviral vector platform) அடிப்படையாகக் கொண்டது, இது பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ஆர்.டி.ஐ.எஃப் கூறுகிற்து.
Also Read | Vaccine Tours: அமெரிக்காவுக்கு தடுப்பூசி சுற்றுலா போவதன் பின்னணி தெரியுமா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR