கல்வி மந்திரிக்கே டி ஊற்றி கொடுத்த பள்ளி மாணவன்!!
கல்வி மந்திரி பங்கேற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் டீ, ஸ்னாக்ஸ் பரிமாறியதால் பரபரப்பு!!
மத்தியப்பிரதேசத்தில் 'பால்ராங் சமரோ' என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில்,பல மாநிலத்திளிருந்து பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்வி மந்திரி விஜய் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் டீ மற்றும் ஸ்னாக்ஸ் பரிமாறினர். மாணவர்களின் வளர்ச்சிக்காக நடத்தப்படும் நிகழ்ச்சியின் மாணவர்களை வேலை வாங்கியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து விஜய் ஷா பேசும் போது, 'நிகழ்ச்சியில் பணிபுரிய வேலையாட்கள் உள்ளனர். ஆனால் மாணவர்கள் இது போன்ற பணிகள் புரிந்தால் விருந்தோம்பல் பண்பு வளரும்' என கூறினார்.
இதையடுத்து, 'கல்வி அதிகாரி அஞ்சு பந்தோரியா பேசுகையில், மாணவர்கள் உணவு பரிமாறுவது பாரம்பரிய நிகழ்ச்சியாகும். இருப்பினும் பள்ளி மாணவர்களை வேலை வாங்குவது தவறு என்பதால், அவர்கள் பரிமாறுவதை நிறுத்தி விட்டேன்' என கூறினார்.