ஐ.நா தலைமைச் செயலாளருடன் குடியரசுத் தலைவர் சந்திப்பு!
குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களை ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் சந்தித்தார்!
குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களை ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் சந்தித்தார்!
இந்தியாவிற்கு முதன் முறையாக வருகை புரிந்துள்ள ஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரஸ் அவர்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் வரவேற்றார்.
மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாடு மற்றும் தூய்மை இந்தியா இயக்கத்தின் 4-வது ஆண்டு விழா ஆகியவற்றில் ஐநா பங்களிப்பை இந்தியா மிகவும் மதிப்பதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். மேலும், மாறி வரும் காலத்திற்கேற்ப ஐ.நா-வும் மாற்றத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் செய்யாமல் ஐ.நா. சீர்திருத்தம் முழுமையடையாது என தெரிவித்த குடியரசுத் தலைவர், பாதுகாப்பு சபையில் தற்போதுள்ள நிரந்தர உறுப்பினர் பதவி சம கால உலக யதார்த்தங்களை பிரதிபலிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் 21-ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு சபையின் உறுப்பினர் பதவியையும், பணி முறைகளையும் தற்காலப்படுத்துவது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்!