தூத்துக்குடியில் இன்று மாலை முதல் வருகிற 11-ந் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் மற்றும் தலைவர் சி.பசுபதிபாண்டியன் நினைவுநாள் நாளை தூத்துக்குடி அலங்காரத்தட்டில் அனுசரிக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த நிகழ்ச்சி அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடப்பதற்காகவும், சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் வகையிலும், இன்று மாலை 6 மணி முதல் வருகிற 11-ந் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


இதனால் தடை விதிக்கப்பட்டுள்ள நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடக்க இருந்தால், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை அணுகி முன் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவல் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.