காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜய்மக்கான், டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுநாள்வரை தனக்கு ஒத்துழைப்பு அளித்த காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும், கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவித்து, தனது ராஜினாமா அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.


டெல்லியில் இருந்து 2 முறை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், முன்னாள் முதல்வர் சீலா தீக்சிட் அவர்களின் பதவிகாலத்தின் போது டெல்லி சட்டப்பேரவை சபாநாயகராகவும் இருந்தது குறிப்பிட்டத்தக்கது.



கடந்த 2004-ஆம் ஆண்டு பாஜக வேட்பாளர் ஜகமோகனால் டெல்லி தொகுதியில் தோற்கடிக்கப்பட்ட மகான், 2009-ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகியில் வெற்றிப்பெற்று அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இடம் பிடித்தார்.


பின்னர் 2011-ஆம் ஆண்டு அமைச்சர் MS கில்-க்கு பதிலாக விளையாட்டு துறை அமைச்சாரக பெறுப்பேற்றுக்கொண்டார்.


எனினும் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் மீனாட்சி லேக்கி-யிடம் தேல்வியடைந்தார். 


டெல்லி காங்கிரஸ் கமிட்டியில் மட்டும் அல்லாது, இந்திய தேசிய காங்கிரஸிலும் முக்கிய பங்கு வகிக்கும் அஜய், தற்போது தனது டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் பதவியினை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.


மக்களவைத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், காங்கிரஸ் தரப்பில் இருந்து  அவருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.