இன்றைய இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ்  37,889.68 ஆகவும், நிஃப்டி 11,384.45 புள்ளிகளையும் எட்டியுள்ளது.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போதே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 112.45 புள்ளிகள் எட்டியுள்ளது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 112.45 புள்ளிகள் அதிகரித்து 37,920.84 புள்ளிகளை கொண்டுள்ளது. 


தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி பொறுத்தமட்டில் 34.55 புள்ளிகள் அதிகரித்து 11,388.05 புள்ளிகளாக காணப்படுகிறது. 


சென்செக்சில் இடம்பெற்றுள்ள 30 நிறுவனங்களில் கோல் இந்தியா, மாருதி சுசுகி ஆகிய இரு நிறுவனங்களை தவிர அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் விலை சரிவுடனே காணப்பட்டது. ரிலையன்ஸ் இன்டஸ்டீரிஸ், பார்தி ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ், அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களின் பங்குகள் 3% அதிகமாக சரிவுடன் காணப்பட்டது.  ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 8% லாபம் பெற்றுள்ளது.  



அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லாதது சர்வதேச முதலீட்டாளர்களிடையே தயக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள தொடர் இழுபறி சர்வதேச சந்தைகளின் சரிவுக்கு மேலும் வழிவகுத்தது. அதன் தாக்கம், இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.


2018 - 19 ஆம் நிதியாண்டு முடிவுக்கு வரவிருப்பதையடுத்து, உள்நாட்டு முதலீட்டாளர்களும் பங்குகளின் கையிருப்பை குறைத்துக் கொள்ளும் வகையில், லாப நோக்கம் கருதி அவற்றை விற்பனை செய்தனர். இதுவும், பங்குச் சந்தைகளின் சரிவுக்கு வழிவகுத்தது.