பி.ஏ. தேர்வுக்கான ஹால்டிக்கெட்டில் பிரதமர் மோடி புகைப்படம்
பீகாரைச் சேர்ந்த கல்லூரி மாணவளுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில், பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்டோரது புகைப்படம் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் உள்ள மதுபானி, சமஸ்திபூர் மற்றும் பெகுசராய் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகின்றன. இதில் இளங்கலை 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு, கல்லூரித் தேர்வுகளுக்காக ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், சிலருக்கு பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் தோனி, பீகார் ஆளுநர் பாகு சவுகான் ஆகியோரின் புகைப்படங்கள் ஹால்டிக்கெட்டுகளில் இடம் பெற்றுள்ளன.
சமூக வலைதளங்கள் மூலம் இந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | 'உங்களுக்கு நாங்க பொண்ணு தரோம்' - தமிழ் பெண்களிடம் வெட்கப்பட்ட ராகுல் காந்தி...
ஹால்டிக்கெட்டுகள் முற்றிலும் இணைய வழியே வழங்கப்பட்டு, அவற்றை மாணவர்கள் பதிவிறக்கம் செய்ய அனைவருக்கும் தனிப்பட்ட உள்நுழைவு விவரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், முன்னதாக, புகைப்படங்கள் மற்றும் தரவுகளை மாணவர்களே பதிவேற்றியதாகவும், அவர்களில் சிலர் புகைப்படங்களை மாற்றி பதிவேற்றி இருக்க வாய்ப்புள்ளதாகவும், பல்கலைக்கழக பதிவாளர் கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதனால் பல்கலைக்கழகத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும், பிரதமர் மற்றும் ஆளுநரின் புகைப்படங்களை தவறாகப் பயன்படுத்தியதும் தவறான விஷயம் எனவும், சம்மந்தப்பட்டால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழக பதிவாளர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | ஆன்லைன் லோன் ஆப் மோசடி கும்பலின் 50 வங்கி கணக்குகள் முடக்கம்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ