ஏர் இந்தியா நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கிருந்து விமானங்கள் புறப்படுவது தாமதமாகியுள்ளது!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியாவின் துணைநிறுவனமான ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்டின் ஒப்பந்த ஊழியர்கள் நேற்றிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இதனிடைய பணிகள் முடங்கியுள்ளதால் மும்பையில் இருந்து பிற நகரங்களுக்கு விமானங்கள் புறப்பட்டுச் செல்வது தாமதமாகியுள்ளது. இதனால் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் பலமணி நேரம் காத்துக்கிடக்கின்றனர். 


ஏர் இந்தியா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த அறிக்கையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்கள் இந்த விமானநிலையை சீர்செய்வதற்கு பொறுப்பேற்றுள்ளனர். மும்பையில் இருந்து அதிகாலை விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாகி விட்டது. 


"ஏர் இந்தியாவின் நிரந்தர ஊழியர்கள் விமானத்தை சுலபமாக்க வேண்டும், 2 மணி நேரம் தாமதமாக மும்பையில் இருந்து அதிகாலையில் மட்டுமே விமானங்கள் இயக்கப்படுகின்றன" என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.