Bilkis Bano Case: `குற்றவாளிகளின் காவலாளி` யார் என்பது அம்பலமாகியுள்ளது -ராகுல் காந்தி
Bilkis Bano Rape Case: பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற எதிர்கட்சியினர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அசாதுதீன் ஓவைசி உட்பட பலர், பாஜகவின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது எனக் கூறியுள்ளனர்.
Bilkis Bano in Tamil: பில்கிஸ் பானு என்ற கர்பிணி பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்க் கட்சிகள் வரவேற்றுள்ளன. இது நீதிக்கு கிடைத்த வெற்றி என்றும், பாஜக பெண்களுக்கு எதிரானது என்றும், அவர்கள் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு ஆதரவாக நிற்கிறார்கள் என குற்றம்சாட்டி உள்ளனர்.
குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை -உச்சநீதிமன்றம்
பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது எனக் கூறிய உச்சநீதிமன்றம், "பில்கிஸ் பானு வழக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்றதால் 11 பேரை விடுவிப்பது குறித்து மகாராஷ்டிர அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
அதாவது குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432(7)(b)இன் கீழ், தண்டனையை ரத்து செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் மேற்கோள்காட்டி உள்ளனர்.
மேலும் படிக்க - SC: பில்கிஸ் பானோ பலாத்கார குற்றவாளிகளை விடுவிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை
"திமிர்பிடித்த" பாஜக அரசுக்கு எதிரான வெற்றி -ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி (Congress MP Rahul Gandh), தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த பதிவில், பில்கிஸ் பானுவின் அயராத போராட்டம், "திமிர்பிடித்த" பாஜக அரசுக்கு எதிரான நீதியின் வெற்றியின் அடையாளம் என்று கூறியுள்ளார்.
மேலும் தேர்தல் ஆதாயங்களுக்காக நீதியைக் கொலை செய்யும் போக்கு ஜனநாயக அமைப்பிற்கு ஆபத்தானது. இன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் மீண்டும் "குற்றவாளிகளின் பாதுகாவலர் யார்" என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு உள்ளது என்று ராகுல் காந்தி கூறினார்.
இறுதியில் நீதி வென்றது -பிரியங்கா காந்தி வாத்ரா
பில்கிஸ் பானு கற்பழிப்பு வழக்கில் (Bilkis Bano Rape Case) உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற பிரியங்கா காந்தி வாத்ரா (Priyanka Gandhi Vadra), "இறுதியில் நீதி வென்றது" எனக் கூறியுள்ளார்.
"இந்த உத்தரவின் மூலம், பாரதிய ஜனதா கட்சியின் பெண்களுக்கு எதிரான கொள்கைகள் மீதான முக்காடு நீங்கியுள்ளது. இனி நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை மேலும் வலுப்பெறும். பில்கிஸ் பானு தனது போராட்டத்தைத் துணிச்சலுடன் தொடர வாழ்த்துகள்" என்று அவர் தனது எக்ஸ் ('X') தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க - Bilkis Bano: பில்கிஸ் பானோ மனு விசாரணையில் இருந்து விலகிய உச்ச நீதிமன்ற நீதிபதி
பெண்களைப் பற்றிய பாஜகவின் சிந்தனை கேவலமானது -தமிழக காங்கிரஸ்
தமிழக காங்கிரஸ் சார்பில், எக்ஸ் (X) தளத்தில், "பாஜக அரசால் விடுதலை செய்யப்பட்ட பில்கிஸ் பானு பலாத்கார குற்றவாளிகள் மீண்டும் சிறைக்கு செல்வார்கள். பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இந்த முடிவு, பில்கிஸ் பானுவை பலாத்காரம் செய்தவர்களை விடுவித்த குஜராத் பாஜக அரசின், பெண்களுக்கு எதிரான செயலை அம்பலப்படுத்தி உள்ளது. பெண்களைப் பற்றிய பாஜகவின் சிந்தனை எவ்வளவு கேவலமானது என்பதை இது காட்டுகிறது" எனப் பதிவிட்டு உள்ளனர்.
பெண்கள் மீதான பாஜகவின் பார்வை அம்பலம் -பவன் கேரா
காங்கிரஸின் ஊடகங்கள் மற்றும் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா கூறுகையில், குஜராத் அரசு 11 கற்பழிப்பு குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, "பெண்கள் மீதான பாஜகவின் பார்வையை அம்பலமாகி உள்ளது என்றும், இந்த குற்றவாளிகளை சட்டவிரோதமாக விடுவிக்க வழிவகுத்தவர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கியவர்களின் முகத்தில் ஓங்கி விழுந்த அறை" என்று பவன் கேரா கூறியுள்ளார்.
மேலும் படிக்க - இப்படிப்பட்ட அரசியல் செய்வதற்கு வெட்கமில்லையா பிரதமரே... ராகுல் காந்தி தாக்கு
பெண்கள் அதிகாரம் பற்றி பிரதமர் பேசுவது "வெற்று கூற்றுக்கள்" -அசாதுதீன் ஒவைசி
ஏஐஎம்ஐஎம் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றதுடன், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் விஷயத்தில் பாஜக கூறிவந்த "வெற்றுக் கூற்றுக்களை" இது அம்பலப்படுத்தி உள்ளது எனக் கூறியுள்ளார்.
"எந்த அரசும் தங்கள் கைகளில் அதிகாரத்தை எடுத்து, அத்தகைய குற்றவாளிகளின் விடுதலைக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது. அமித் ஷா தலைமையிலான மத்திய உள்துறை அமைச்சகம் ஏன் அமைதியாக இருந்தது என்று நான் கேட்க விரும்புகிறேன். இந்த குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் தெளிவாக தெரிகிறது.. நாரி சக்தி (பெண்கள் அதிகாரம்) பற்றி பிரதமர் மோடி பேசுவது வெற்று கூற்றுக்கள் என்பது அம்பலமாகியுள்ளது என அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார்.
மேலும் அவர், மாநிலத்திலும், மத்தியிலும் பெண்கள் மத்தியில் பாஜக தோல்வியடைந்துள்ளது. பில்கிஸ் பானு மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பிரதமர் மோடியும் பாஜகவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம் என்று அவர் கூறினார்.
பாஜகவின் முகத்தில் விழுந்த அறை -திரிணாமுல் காங்கிரஸ்
பில்கிஸ் பானு வழக்கின் (Bilkis Bano Case) உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, "இந்தக் குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கும், குற்றவாளிகளை மகிமைப்படுத்துவதற்கும் வழிவகுத்த பாஜகவின் முகத்தில் விழுந்த அறை" என்று திரிணாமுல் காங்கிரஸ் (Trinamool Congress) கூறியுள்ளது.
மேலும் படிக்க - பில்கிஸ் பானோ வழக்கு: நாட்டு பெண்களுக்கு என்ன செய்தி சொல்கிறீர்கள்? ராகுல் சாடல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ