SC: பில்கிஸ் பானோ பலாத்கார குற்றவாளிகளை விடுவிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை

Bilkis Bano Case: 2002 கோத்ரா கலவரத்தின் போது கூட்டுப் பலாத்கார குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக பில்கிஸ் பானோ தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 8, 2024, 12:33 PM IST
  • பலாத்கார குற்றவாளிகள் விடுதலை ரத்து
  • பில்கிஸ் பானோ தாக்கல் செய்த மனு ஏற்பு
  • விடுதலை செய்ய யாருக்கு அதிகாரம் உண்டு?
SC: பில்கிஸ் பானோ பலாத்கார குற்றவாளிகளை விடுவிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை title=

பில்கிஸ் பானோ வழக்கு: 11 குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானோ தாக்கல் செய்த மனு ஏற்கத்தக்கது என்று உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. பில்கிஸ் பானோ (Bilkis Bano) வழக்கில் குற்றவாளிகளை விடுவிக்கும் முடிவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. 2002 கோத்ரா கலவரத்தின் போது கூட்டுப் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோ, குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக  தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

குஜராத் மாநிலத்தில் 2002 கலவரத்தின் போது நடந்த இந்த பாலியல் வன்புணர்வு வழக்கின் குற்றவாளிகள் அனைவரும் 2022 ஆகஸ்ட் 15 அன்று, மாநில அரசால் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து தண்டனை பெற்ற மாநிலம்தான் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவது குறித்து முடிவெடுக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் கூற்றுப்படி, இந்த வழக்கில் பொதுமன்னிப்பு முடிவை குஜராத் எடுக்கமுடியாது, மகாராஷ்டிரா அரசு எடுக்கலாம். குற்றவாளிகள் 11 பேரும் இரண்டு வாரங்களுக்குள் சிறைக்கு செல்ல வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவின் மனுக்களை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய சட்ட அமர்வு, இந்த வழக்கில், குஜராத் அரசுக்கு மன்னிப்பு வழங்கக்கூடிய உரிமை தொடர்பான கேள்விகள் எழுவதாக தெரிவித்தது. 

மேலும் படிக்க | Boycott: தீவிரமாகும் மாலத்தீவு சர்ச்சை! வைரலாகும் Chalo Lakshadweep ஹேஷ்டேக் வைரல்

குற்றவாளிகளை குஜராத் அரசு மன்னித்த உத்தரவு அதன் அதிகார வரம்பிற்குப் புறம்பானது என்றும்,  மகாராஷ்டிர அரசுதான் இந்த பொதுமன்னிப்பு உத்தரவை வழங்குவது என்றால், அந்த உரிமை மகாராஷ்டிர மாநில அரசுக்குத் தான் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

பில்கிஸ் பானோ வழக்கு பின்னணி

தன்னை பலாத்காரம் செய்த 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக பில்கிஸ் பானோ மனு தாக்கல் செய்திருந்தார். கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கு குற்றவாளிகள் 11 பேரும், தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக  நீதிமன்றத்தை அணுகினார்கள்.

அவர்கள், 14 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்றுவந்த நிலையில், குற்றவாளிகள் விடுதலைக் குறித்து குஜராத் மாநில அரசு ஒரு குழுவை அமைத்து முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இதனையடுத்து 10 பேர் கொண்ட குழுவை குஜராத் மாநில அரசு அமைத்தது.

2002 பிப்ரவரி 27 அன்று, குஜராத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் எரிக்கப்பட்டது. அந்த வன்முறையில் 59 பேர் இறந்தனர். அப்போது பில்கிஸ் பானு ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார், இந்த சம்பவத்தில் அவரது குழந்தையும் உயிரிழந்தது. குற்றவாளிகளை இவ்வாறு விடுவிப்பதற்கான தீர்மானம் குறித்து பலத்த விமர்சனங்கள் எழுந்தன.

குஜராத் அரசின் இந்த முடிவை எதிர்த்து பில்கிஸ் பானோ உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அதில் அவரது மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

மேலும் படிக்க | 40,000 கோடி ரூபாய் வேண்டாம் என்று சொல்லி துறவறம் மேற்கொண்ட தமிழரை தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News