14 ஆண்டுகளாக பாலியல் தொல்லை - மூன்று குழந்தைகளுக்கு தாயான பெண்
அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், பாலியல் தொந்தரவு (Rape), பெண் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நர்வானா நகர காவல் நிலைய அதிகாரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஜிந்த் (ஹரியானா): அரியானாவின் (Haryana) ஜிந்த் மாவட்டத்தில், ஒரு வாலிபர் தன்னை கடத்திச் சென்று 14 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளதாக அரியானா போலீசார் இந்த தகவலை வழங்கியுள்ளனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் மவு மாவட்டத்தில் வசிக்கும் 28 வயது பெண் ஒருவர், போலீசாருக்கு அளித்த புகாரில், "2007 ஆம் ஆண்டு, பீகார் மாநில சாம்பாரனில் வசிக்கும் சுமன் என்பவன், அந்த பெண்ணைக் கடத்தி, பகத்சிங் காலனி நர்வானா பகுதிக்கு அழைத்து வந்தாகவும், அப்போதிருந்து அந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்து வருவதாகவும்" குற்றம் சாட்டியுள்ளார்.
அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், பாலியல் தொந்தரவு (Rape), பெண் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நர்வானா நகர காவல் நிலைய அதிகாரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் பெண்ணை கடத்தி வந்த சுமன் என்ற வாலிபன், இதுவரை அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், அவர்களுக்கு மூன்று குழந்தைகளும் இருப்பதாக அந்த பெண் தனது புகாரில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
ALSO READ | சினிமா நடிகை கொடுத்த பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு!
சிறுமி கடத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் (Sexual Harassment) குறித்து புகார் அளித்துள்ளதாக நகர காவல் நிலைய நர்வானா காவல்துறை விசாரணை அதிகாரி ராஜேஷ் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட சுமன் மீது பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக ராஜேஷ் தெரிவித்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ALSO READ | பெண் அதிகாரியை முத்தமிட்ட Tamil Nadu Special DGP மீது பாலியல் குற்றச்சாட்டு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR