புதுதில்லி: வரலாற்று சிறப்புமிக்க ஜம்மா மசூதி வெள்ளிக்கிழமை அன்று, அதாவது  ஜூலை 4 தொழுகைக்காக மீண்டும் திறக்கப்படும் என்று தேசிய தலைநகரில் உள்ள மிகப்பெரிய மசூதியின் ஷாஹி இமாம் சையத் அகமது புகாரி செவ்வாய்க்கிழமை  அன்று தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் தொற்று நோய் (கோவிட் -19)  மிக வேகமாக பரவி வரும் நிலையில், தொற்றுநோய்  பரவலை தடுப்பதற்காக, நாடு முழுவதும், மார்ச் 25 முதல்  முழுமையான லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. பிறகு அன் லாக் நடைமுறையின் கீழ் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக, ஜூன் 8 ஆம் தேதி மசூதி மீண்டும் திறக்கப்பட்டது. எணினும், தில்லியில் தொற்று நோய் பரவல் மிக அதிகமாக இருந்ததன் காரணமாக, மூன்று நாட்களுக்குப் பிறகு மூடப்பட்டது.


செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) ​​வரை,தொழுகைக்காக மசூதியை தற்காலிகமாக மூட முடிவு செய்வதற்கு முன்பு ஷாஹி இமாம் அவர்கள், இது தொடர்பான பொது கருத்தை நாடியிருந்தார்.


ALSO READ |  விண்வெளி வீரர்கள் சந்திக்கும் கழிப்பறை பிரச்சனையை தீர்க்க NASA முயற்சி...!!!


ஷாஹி இமாமிற்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட சோகமான சம்பவம் காரணமாகவும், இந்த நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்பட்டது.  20 ஆண்டுகளாக, அவரது தனிப்பட்ட உதவியாளராக இருந்து வந்த, 57 வயதான அமானுல்லா என்பவர் கொரோனா தொற்றுநோய் காரணமாக இறந்தார்.


பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே  மசூதியை தொழுகைக்காக மீண்டும் திறக்க வேண்டும் என மசூதி அதிகாரிகள் நினைப்பதாக ஷாஹி இமாம் கூறினார்.


ALSO READ | வடகொரிய சர்வாதிகாரி தனது சுக போக வாழ்க்கைக்காக இயக்கும் Office 39 Network....!!!


மசூதிக்கு வருபவர்கள் தங்கள் உடலின் பாகங்களை சுத்தப்படுத்துவதற்கான ஒரு இஸ்லாமிய நடைமுறையான வாஸூ (wazoo) என்ற நடைமுறையை  வீட்டிலேயே பின்பற்றி,  மசூதிக்கு வரும் போது, தனி நபர் விலகலை பின்பற்றுமாறும், தொழுகைக்காக தனியாக பாய்களைகொண்டு வருமாறும் வலியுறுத்தப்பட்டது.


”டெல்லியில் கோவிட் -19 தொற்று பாதிப்புகள் அதிகரித்த போதிலும், இப்போது, வைரஸ் நோய் குறித்து நிறைய விழிப்புணர்வு உள்ளதால், வைரஸ் பரவல் குறித்த அச்சம் மக்களிடையே குறைந்து வருகிறது” என்று புகாரி கூறினார்.


தொழுகை செய்ய விரும்புபவர்கள், மசூதியில் ஒரு நாளைக்கு நான்கு முறை தொழுகை செய்யலாம். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், காலை தொழுகைக்காக மசூதி வர இயலாது .


ஃபதேபுரி  மசூதி உட்பட நகரத்தின் பிற மசூதிகளையும், ஜூன் இறுதி வரை மசூதிகளை மூட வைக்க முடிவெடுக்கப்பட்டது. இப்பொழுது ஷாஹி இமாம் அவர்கள் எடுத்த முடிவைப் பின்பற்றி, வெள்ளிக்கிழமை அதாவது  (ஜூலை 4) முதல் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.