விண்வெளி வீரர்கள் சந்திக்கும் கழிப்பறை பிரச்சனையை தீர்க்க NASA முயற்சி...!!!

விண்வெளிக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனையான கழிப்பறை பிரச்சனையை தீர்க்கும் NASAவின் சவாலை ஏற்றுக் கொண்டு 26 லட்சம் ரூபாய்  வெல்லலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 30, 2020, 02:33 PM IST
  • விண்வெளிக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை கழிப்பறை பிரச்சனை ஆகும்.
  • சந்திரனில், புவி ஈர்ப்பு விசை என்பது இல்லாத காரணத்தால் விண்வெளி வீரர்கள், தங்கள் உடையுடன் இணைந்த டைப்பரை பயன்படுத்துகின்றனர்.
  • நாசா விடுத்துள்ள சவாலை நிறைவேற்றி லட்சக்கணக்கான பணத்தை வெல்லாம்.
விண்வெளி வீரர்கள் சந்திக்கும் கழிப்பறை பிரச்சனையை தீர்க்க NASA முயற்சி...!!! title=

விண்வெளிக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை கழிப்பறை பிரச்சனை ஆகும். நீங்கள் விஞ்ஞானி என்றால், NASAவின் சவாலை ஏற்றுக் கொண்டு அதை நிறைவேற்றினால்,  26 லட்சம் ரூபாய்  வெல்லலாம்.

புதுடெல்லி (New Delhi): லாக்டவுனின் போது, வீட்டில் இருந்து கொண்டே,  26 லட்சம் ரூபாய் சம்பாதிக்க விரும்பினால், அமெரிக்க நிறுவனமான நாசா விடுத்துள்ள சவாலை நிறைவேற்றி வெற்றி பெறலாம். விண்வெளியில் மற்றும் சந்திரனில் பயன்படுத்தப்படுத்தக் கூடிய கழிப்பறையின் வடிவமைப்பை உருவாக்குப்பவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படும் என நாசா அறிவித்துள்ளது.

ALSO READ | வடகொரிய சர்வாதிகாரி தனது சுக போக வாழ்க்கைக்காக இயக்கும் Office 39 Network....!!!

இது குறித்து நாசா (NASA) தனது ட்வீட் மூலம் முழுமையான தகவல்களை அளித்துள்ளது. விண்வெளிக்குச் செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு ஆராய்ச்சிக்காக பல நாட்கள் செலவிட வேண்டியிருக்கிறது.   அதில் அவர்கள் முக்கியமாக சந்திக்கும் பிரச்சனை கழிப்பறை பிரச்சனை ஆகும்.

சந்திரனில், புவி ஈர்ப்பு விசை  என்பது இல்லாத காரணத்தால் விண்வெளி வீரர்கள்,  தங்கள் உடையுடன் இணைந்த டைப்பரை பயன்படுத்துகின்றனர். இதற்காக ஏற்படும் பொருட்செலவும் அதிகம். கழிப்பறையை ஏற்படுத்துவதற்கான ஆராய்ச்சிப் பணிகள் நெடுநாட்களாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ALSO READ |அதிர்ச்சி தகவல்... வயிற்று வலியால் தான் ஆண் என்பதை உணர்ந்த மணமான பெண்..!!!             

விண்வெளி அல்லது சந்திரனுக்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கு அதிநவீன கழிப்பறை தேவைப்படும். இந்த கழிப்பறை மிகவும் லேசனாதாகவும்,  சிறந்த வகையில் மறுசுழற்சி செய்யக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

இதற்கான சவாலில் வெற்றி பெற்று, முதல் இடத்தில் தேர்வாகும் நபருக்கு ரூ .15 லட்சமும், இரண்டாம் இடத்திற்கு தேர்வாகும் நபருக்கு ரூ .7.60 லட்சமும், மூன்றாம் இடத்திற்கு தேர்வாகும் நபருக்கு ரூ .3.80 லட்சமும் கிடைக்கும். நாசா தனது ஆர்ட்டெமிஸ் மூன் மிஷன் ( Artemis Moon Mission) மூலம் 2024 ஆம் ஆண்டில் முதல் முறையாக பெண் விண்வெளி வீரர் ஒருவரை சந்திரனுக்கு அனுப்பப் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், இரு பாலினத்தவரும் பயன்படுத்தக் கூடிய கழிப்பறை தேவைப்படும். விண்வெளிக்கு செல்லும் வீரர்கள், அங்கே  நீண்ட காலம் தங்கி இருக்கக் கூடிய வகையில் ஒரு அடிப்படை முகாமை உருவாக்க நாசா ( NASA திட்டமிட்டுள்ளது.

NASA விடுத்துள்ள இந்த சவாலில் உலகில் ஆர்வமும் திறமையும் உள்ள அனைவரும் பங்கேற்கலாம். இந்த திட்டத்தின் மாதிரிகள்,  வருகின்ற ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்குள் நாசாவிற்கு கிடைக்க வேண்டும் என்று நாசா கூறியுள்ளது.

Trending News