ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பதவி ஏற்றார் சக்திகாந்த தாஸ்!
வங்கித்துறையில் உடனடியாக கவனம் செலுத்தவுள்ளதாக ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்!
வங்கித்துறையில் உடனடியாக கவனம் செலுத்தவுள்ளதாக ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்!
ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் கடந்த டிச.,10-ஆம் நாள் திடீரென விலகினார். இதைத்தொடர்ந்து மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் பதவியில் இருந்து, கடந்த 2017-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற, சக்திகாந்த தாஸ் அவர்களை ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக மத்திய அரசு நியமித்தது. இதனையடுத்து இன்று அவர் ரிசர்வ் வங்கியின் கவர்னராக பதவியேற்றுக்கொண்டார்.
பதவியேற்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்... ரிசர்வ் வங்கியின் தனித்துவம், மாண்பு, மதிப்பு, தன்னாட்சி ஆகியவற்றை காக்கப்படுவதை உறுதி செய்வேன். அதற்காக முழு முயற்சி செய்வேன் என தெரிவித்துள்ளார். மேலும், ரிசர்வ் வங்கியில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது பெருமை, இது மிகப்பெரிய வாய்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரத்திற்கா அனைவருடனும் இணைந்து சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன் என குறிப்பிட்ட அவர் நாளை காலை பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள், தலைமை செயல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்த பேசிய அவர்... வங்கித்துறை, பெரிய சவால்களை சந்தித்து வருகிறது, இதனை தீர்க்க வேண்டும். உடனடியாக, வங்கித்துறையில் கவனம் செலுத்த உள்ளேன் எனவும் தெரிவித்தார். மத்திய அரசு, ரிசர்வ் வங்கி இடையே சிறப்பான உறவு உள்ளதா இல்லையா என்பது தெரியாது. ஆனால் அரசு என்பது நாட்டையும் பொருளாதாரத்தையும் கவனிக்க வேண்டும், பெரிய பொருளாதாரத்தை நிர்வகிக்க வேண்டும். எனவே அரசும், ரிசர்வ் வங்கி இடையே ஆலோசனை நடத்தும்.
அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்னும் நம்பிக்கை உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.