திருவனந்தபுரத்தில் கோயிலில் துலாபாரத்தின் போது கீழே விழுந்து காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலையில் காயம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலையாளப் புத்தாண்டான விஷு இன்று கேரளாவில் கொண்டாடப்படுகிறது. இன்று மக்கள் கோவில்களுக்கு சென்று வழிபட்டு தங்கள் பிராத்தனைகளையும் துலாபாரம் எனப்படும் வேண்டுதலை நிறைவேற்றுவர். பழங்கள், நெய், அரிசி, சர்க்கரை, வெல்லம் போன்ற பொருட்கள் துலாபாரத்தில் பயன்படுத்தப்படும். 


இந்நிலையில், கேரளா மக்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் சசிதரூர் வளதுக்களை தெரிவித்துள்ளார். 



கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சசிதரூர் போட்டியிடுகிறார். தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் இவர், திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. எடைக்கு எடை காணிக்கை வழங்கும் துலாபாரம் சடங்கில் கலந்து கொண்டுள்ளார். 


இந்நிலையில், துலாபாரம் வேண்டுதலை நிறைவேற்ற காங்கிரஸ் எம்.பி சசிதரூர் தராசில் அமர்ந்த போது, திடீரென தராசு உடைந்து கீழே விழுந்தது. இதில் தராசின் இரும்பு கொக்கியும் தலையில் விழுந்ததால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவருக்கு தலையில் 6 தையல்கள் போடப்பட்டது. அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு காங்கிரஸ் பிரமுகர்கள் அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.



ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்து திருவனந்தபுரம் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சசிதரூர், பாரதீய ஜனதாவின் கும்மனம் ராஜசேகரனையும் சி.பி.ஐ. (எம்) தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிடும் சி திவாகரனையும் எதிர்த்து போட்டியிடுகிறார்.