நவராத்திரியை முன்னிட்டு மகாராஷ்டிர மாநிலத்தில் கோவில்கள் திறக்கப்படுகின்றன.  கோவிட் -19 தொடர்பாக அரசு வெளியிட்டிருக்கும் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி, மகாராஷ்டிரா அரசு இப்போது மதத் தளங்கள் அனைத்தையும் திறக்க முடிவு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிராவில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும், நவராத்திரியின் முதல் நாளிலிருந்து திறக்கப்படும். எனவே அக்டோபர் 7 முதல் மீண்டும் சீரடி சாய்பாபா கோவில், ஓம்காரேஸ்வரர் கோவில், மகாகாளேஷ்வர் கோவில் உட்பட அனைத்து ஆலயங்களும் திறக்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.


இது தொடர்பாக மாநில முதலமைச்சர் அலுவலகம் வெள்ளிக்கிழமையன்று அறிவிப்பு வெளியிட்டது. அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கும் நவராத்திரி விழாவை கருத்தில் கொண்டு கோவில்களை மீண்டும் திறக்க முடிவு எடுக்கப்பட்டாலும், கோவிட் வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாக பின்பற்றபட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



கோவிட் -19 இன் இரண்டாவது அலையில் மகாராஷ்டிர மாநிலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அங்கு கோவில்கள் உட்பட மத வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. நவராத்திரி விழா எதிர்வருவதை முன்னிட்டு மகாராஷ்டிராவில் மூடப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களைத் திறக்க கோரி, பாஜக கோரி வருகிறது. பாரதிய ஜனதா கட்சி மட்டுமல்ல, ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவும் கோவில்களைத் திறக்கக் கோருகிறது.


மகாராஷ்டிராவில் இன்று செப்டம்பர் 24ம் தேதி 3,286 புதிய கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளது. இத்துடன் சேர்த்து மாநிலத்தின் ஒட்டுமொத்த கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 65,37,843 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொடிய தொற்று நோயால், மேலும் 51 உயிர்கள் பலியானதால், பலி எண்ணிக்கை 1,38,776 ஆக உயர்ந்தது. மாநிலத்தின் இறப்பு விகிதம் 2.12 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.


Also Read | இனி திருப்பதி போக கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்


வியாழக்கிழமை மாலை முதல் 3,933 நோயாளிகள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டதால், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 63,57,012 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, மகாராஷ்டிராவின் கோவிட் -19 மீட்பு விகிதம் 97.23 சதவீதமாக உள்ளது. எனவே, மத வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும்போது, கோவிட் வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.


Also Read | மருத்துவ ஒதுக்கீடு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR