இந்திய ஐடி சேவை துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து கொண்டு, நாட்டின் 5 மின்னணி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்திருக்கும் HCL  டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த ஷிவ் நாடார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். HCL  நிறுவனம் அவரது ராஜினாமா உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், ஹெச்சிஎல் நிறுவனத்தின், இயக்குநர் குழுவின் ஆலோசகராக ஷிவ் நாடார் தொடருவார் எனவும் என்றும் அவர் எமரிட்டஸ்  தலைவராக பொறுப்பு வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷிவ் நாடார் பதவி விலகியுள்ளதை அடுத்து, HCL நிறுவனத்தின்  நிர்வாகம் பொறுப்பு முழுவதும் தற்போது ஷிவ் நாடாரின்  மகளான ரோஷினி நாடார் வசம் சென்றுள்ளது.


நிறுவனத்தின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரியான விஜயகுமார் நிர்வாக இயக்குநராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டே நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து ஷிவ் நாடார் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஓர் ஆண்டாக இவரின் மகள் ரோஷினி நாடார் தான் அந்த பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ | Basic Salary Hike: ஊழியர்களின் ஊதியம் அதிகரிக்கும், அக்டோபர் 1 முதல் வரவுள்ள முக்கிய மாற்றம்


 


ஷிவ் நாடார் , 1976ம் ஆண்டு தனது நண்பர்களுடன் HCL நிறுவனத்தை தொடங்கினார். நாட்டின் முதல் உள்நாட்டு கணினிகளைத் தயாரித்த பெருமைய பெற்றுள்ள நிறுவனம், பின்னர் ஒரு விரிவான மென்பொருள் சேவைகள்  வழங்கும் உலகளாவிய அமைப்பாக உருவெடுத்தது.


ஷிவ் நாடரின் தலைமையின் கீழ், HCL 1978 ஆம் ஆண்டில் முதல் 8-பிட் நுண்செயலி (8-bit microprocessor)அடிப்படையிலான கணினியுடன் முதல் 'மேட் இன் இந்தியா' ஐடி தயாரிப்புகளுக்காக பெருமை பெற்றது. 1989 ஆம் ஆண்டில் உலகின் முதல் மிகச்சிறந்த மல்டி-ப்ராசஸர் யுனிக்ஸ் UNIX நிறுவலுக்கும் பெருமை பெற்றது.


நோக்கியாவுடன் மிகப்பெரிய மொபைல் விநியோக வலையமைப்பை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் தொலைத் தொடர்பு புரட்சியை ஏற்படுத்துவதில் HCL முக்கிய பங்கு வகித்தது.
 
தற்போது இந்தியாவின் மூன்றாவது பெரிய சாப்ட்வேர் நிறுவனமாக திகழும் ஹெச்சிஎல் நிறுவனம், நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்க்கு தேவையான  சாப்ட்வேரை வடிவமைத்தது.  ஹெச்.சிஎல் நிறுவனத்தில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட பங்குகளை ஷிவ் நாடார் வைத்திருக்கிறார்.


ALSO READ: 7th pay commission தொடர்பான புதிய செய்திகள்! LTA காலக்கெடு நீட்டிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR