டொனால்ட் டிரம்ப் இந்திய வருகைக்கான ஏற்பாடைகுறித்து சிவசேனா விமர்சித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவரும் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி மற்றும் 25 ஆம் தேதியில் இந்தியாவில் பயணம் மேற்கொள்கின்றனர்.  24 ஆம் தேதி குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதால் அங்கு சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. 


அந்தவகையில் டிரம்ப் வருகைக்காக ற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், அரசின் இந்த ஏற்பாடுகளை சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. அதில்,  டிரம்ப் வருகைக்காக செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் இந்தியர்களின் அடிமை மனநிலையை காட்டுகிறது. சுதந்திரத்திற்கு முன் பிரிட்டன் அரசர் இந்தியா போன்ற தங்களின் அடிமை நாடுகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். தற்போது டிரம்ப் வருகைக்காக மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படும் இந்த ஏற்பாடுகள் அதைப் போன்றே உள்ளது. 


டிரம்ப், அகமதாபாத்திற்கு வெறும் 3 மணி நேரம் மட்டுமே செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,  மாநில அரசு கருவூலத்தில் இருந்து ரூ.100 கோடி செலவில் சுவர் கட்டப்படுகிறது. இது மோடி ”வறுமையை மறைப்பது” போல தெரிகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.