Auto Budget 2023: கார் வாங்கியவர்களுக்கு ஷாக் கொடுத்த நிதியமைச்சர்
Auto Budget 2023 in Tamil: 2023 பட்ஜெட்டில் வருமான வரி தொடங்கி விவசாயம் மற்றும் கல்வி வரை பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆட்டோமொபைல் துறை தொடர்பான அறிவிப்பையும் நிதியமைச்சர் வெளியிட்டார். அதன்படி அவரது அறிவிப்பு பல வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.
பட்ஜெட் 2023 வாகனத் துறை: 2023-2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன் போது விவசாயம், கல்வித்துறை மற்றும் வருமான வரித்துறை குறித்து பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி ஆட்டோமொபைல் துறை தொடர்பான அறிவிப்பையும் நிதியமைச்சர் வெளியிட்டார். அவரது அறிவிப்பு பல கார் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். உண்மையில், பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பின் படி, இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு, அதாவது முழுமையாக கட்டப்பட்ட யூனிட்டுகளுக்கு கஸ்டம் டூட்டியை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்த கட்டணம் மின்சார வாகனங்களுக்கும் பொருந்தும். மொத்தத்தில், வெளிநாட்டில் இருந்து வரும் சொகுசு கார்களின் விலை இனி வரும் காலங்களில் விலை உயர்வாக இருக்கக்கூடும்.
முன்னதாக நாடாளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யும் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி, 40,000 டொலர்களுக்கு குறைவான விலையுள்ள CBU வாகனங்களுக்கான இறக்குமதி வரி 60ல் இருந்து 70 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. மேலும் இந்த வரி 3,000 சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட பெட்ரோல் வாகனங்களுக்கும், 2,500 சிசிக்கு குறைவான டீசலில் இயங்கும் வாகனங்களுக்கும் பொருந்தும்.
மேலும் படிக்க | Budget 2023-24 Live Updates: பட்ஜெட் உரை நிறைவு... முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
இதேபோல் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கான கஸ்டம் டூட்டியும் 60 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், பாதியில் நிற்கும் வாகனங்களுக்கான வரியை 30 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்த பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளது.
இதனிடையே $40,000க்கும் அதிகமான மதிப்புள்ள முழுமையாக கட்டமைக்கப்பட்ட கார்களின் இறக்குமதிக்கு ஏற்கனவே 100 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விகிதம் 3000 சிசிக்கு மேல் திறன் கொண்ட பெட்ரோல் வாகனங்களுக்கும், 2500 சிசிக்கு மேல் திறன் கொண்ட டீசல் வாகனங்களுக்கும் பொருந்தும். தரமதிப்பீட்டு நிறுவனமான ஐசிஆர்ஏவின் மூத்த துணைத் தலைவர் ஷம்ஷேர் திவான் கூறுகையில், “இந்த மாற்றம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. இதற்குக் காரணம், தற்போது பெரும்பாலான சொகுசு கார்கள் நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்பட்டுள்ளது. இந்த இறக்குமதி வரி உயர்வு உள்நாட்டு கார் உற்பத்தியை மேலும் ஊக்குவிக்கும் என்றார்.
மேலும் படிக்க | Budget 2023 Highlights: நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ