செல்போனால் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்.. பெற்றோர்களே உஷார்
திருச்சூரில் செல்போனில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்த போது, அது வெடித்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம்.
கேரள மாநிலம் திருச்சூரில் வசித்து வருகின்றனர் அசோக் குமார் மற்றும் செளமியா தம்பதி. இவர்களின் 8 வயது மகளான ஆதித்யஸ்ரீ 3-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில், தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
செல்போனில் சிறுமி வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். வெகு நேரமாக செல்போனை பயன்படுத்திக்கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் தான் எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்துச் சிதறியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த ஆதித்யஸ்ரீ சம்பவ இடத்துலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். Forensic அறிக்கையின் படி, அதிகப்படியாக செல்போன் சூடாகியதே, இந்த சம்பவத்துக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கர்நாடக தேர்தல்2023: யுடர்ன் போட்ட எடப்பாடி - அதிமுக வேட்பாளர் திடீர் வாபஸ்
பழயநனூர் காவல்துறையினர் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு நிபுணர் குழுவின் உதவியோடு, செல்போன் வெடித்துச் சிதறியதற்கான அதிகாரப்பூர்வ காரணம் விரைவில் வெளியாகும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு வெடித்துச்சிதறிய செல்போன் மூன்றாண்டுகளுக்கு முன்பு வாங்கியது. அசோக் குமாரின் உறவினர் இந்த போனை வாங்கிக் கொடுத்துள்ளார். அதோடு கடந்த ஆண்டு இந்த போனின் பேட்டரியும் மாற்றப்பட்டுள்ளது. இந்த வெடி விபத்து நடக்கும் போது சிறுமியும், அவரது பாட்டியும் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். கிச்சனில் பாட்டி வேலை செய்துகொண்டிருந்த போது வெடி சத்தத்துடன் சிறுமி கதறிய சத்தம் கேட்டு பதறி வந்து பெட்ரூமில் சிறுமியை பார்த்துள்ளார். அப்போது முகம் முழுவதும் காயமடைந்து, வலது கையே சிதைந்த நிலையில், சிறுமி கிடந்துள்ளார்.
தற்போது கோடை விடுமுறை என்பதால், சிறுவர்கள் அதிக நேரம் செல்போனிலேயே மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ள நிலையில், இனியும் இதுபோன்று மற்றொரு சம்பவம் நடைபெறாமல் இருக்க வீட்டில் உள்ளவர்கள் குழந்தைகளிடம் செல்போனை அதிக நேரம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ