அதிமுக வேட்பாளர்
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே 10 ஆம் தேதி நடைபெறுகிறது. 224 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி அறிவித்த அன்பரசன் என்பவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
இந்நிலையில், புலிகேசி தொகுதி வேட்பாளரை அதிமுக திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது. பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டதால், அந்த தொகுதியில் அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளர் அன்பரசன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.
வாபஸ் பின்னணி என்ன?
அதிமுகவில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்காமல் இருந்தது. இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இரு தரப்பினரும் அதிமுக சார்பில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்களை அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால் தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் உரிய முடிவை அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு முறையிட, 10 நாட்களுக்குள் பதில் வழங்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது.
எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம்
இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்களையும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் என்பது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பட்டது. பின்னர் அவரது கையொப்பத்துடன் அதிமுக சார்பில் கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் டி அன்பரசன் வேட்புமனுவை தாக்கல் செய்ய வைத்தார்.
இப்போது பொதுச்செயலாளர் விவகாரம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் பாஜகவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வேட்பாளரையும் வாபஸ் வாங்க வைத்துவிட்டார். அரசியல் ரீதியாக காய் நகர்த்திய எடப்பாடிக்கு இது கர்நாடக தேர்தல் சாதகமான முடிவை கொடுதிருப்பதாகவும், மேலிடத்தின் ஆசியும் இருந்ததால் அவருக்கு இந்த வெற்றி சாத்தியமாகியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும் படிக்க | திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு ஒருபோதும் அனுமதியில்லை - செந்தில்பாலாஜி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ