மகளின் திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு தந்தை செய்த சம்பவம்.. அதிர்ச்சி தந்த ஆச்சரியம்
Moradabad News: இங்கே அனைவரும் சமம். மணமகனை போல மணமகளுக்கும் சம உரிமை வழங்கிய தந்தை செயல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
மொராதாபாத்: உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது. இந்திய திருமண முறைப்படி மாப்பிளையை குதிரை வண்டியில் உட்கார வைத்து குடை பிடித்து பட்டாசு வெடிவெடிக்க பூ மழை பொழிய திருமணம் நடைபெறும் மண்டபத்திற்கோ அல்லது தாலி கட்டும் மேடையை நோக்கி அழைத்து செல்வது வழக்கம். ஆனால், இங்கே, திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு, தந்தை தனது மகளை மேளம் தாளம் முழங்க மணமகனை அழைத்து செல்வது போல மகளையும் குதிரையில் உட்கார வைத்து ஊர்வலம் சென்றுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியமடைந்தனர்.
மகன்களைப் போல மகள்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்பதற்காக தான், மாப்பிளையை போல தனது மகளையும் குதிரை வண்டியில் உட்கார வைத்து ஊர்வலம் வந்ததாகக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க: 4 மாசமா குளிக்கல... கப்பு தாங்கல - அறை தோழியை விரட்டியத்த பெண்!
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ:
இந்த சம்பவம் மொராதாபாத் ஹிம்கிரி காலனியில் நடந்துள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் ராஜேஷ் ஷர்மாவின் மகள் ஸ்வேதாவுக்கு டிசம்பர் 7 ஆம் தேதி அதாவது இன்று புதன்கிழமை திருமணம் நடைபெற உள்ளது. ஆனால் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை, ராஜேஷ் சர்மா தனது மகள் ஸ்வேதாவின் குதிரை சவாரி சடங்கை நடத்தினார். இசைத்தாளம் முழங்க குதிரையில் ஊர்வலமாக அழைத்து சென்றார். மாப்பிள்ளைக்கு செய்யம் அலங்காரம் போல மகளுக்கும் அலங்காரம் செய்து ஊர்வலமாக சென்றனர். அதன் பிறகு கோயிலுக்குச் சென்று கடவுளை தரிசனம் செய்தனர். குதிரை வண்டியில் இருந்தபடியே ஸ்வேதாவும் நடனமாடியுள்ளார். இந்த வித்தியாசமான ஊர்வலத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: வகுப்பறையில் ஆசிரியர் செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல்
27 ஆண்டுகளுக்கு முன்பு செய்த தவறுக்கு பிராயச்சித்தம்:
மணப்பெண்ணாகப் போகும் ஸ்வேதா, மாப்பிள்ளை போல் உடை அணிந்து, தலையில் ஷேராவும் அணிந்துக் கொண்டார். அதன் பிறகு திருமண ஊர்வலத்திற்கு கிளம்பினார். 27 ஆண்டுகளுக்கு முன்பு பெண் பிள்ளை (ஸ்வேதா) பிறந்து விட்டதால், அவளை கொண்டாடவில்லை என்று தந்தை ராஜேஷ் சர்மா கூறினார். ஆனால் தனது தவறை உணர்ந்ததால், மாப்பிள்ளை போல பெண்ணை ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளார். சமூகத்தில் ஆண்களைப் போல பெண்களுக்கும் சம உரிமை வழங்கவே இதையெல்லாம் செய்தேன் எனத் தெரிவித்தார்.
வைரல் செய்திகள், வைரல் வீடியோ குறித்து செய்திகளை வாசிக்கவும், காணொளியை காணவும் எங்கள் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களை பின்தொடருவும் மற்றும் லைக் செய்யவும்.
முகநூல் : @ZEETamilNews
ட்விட்டர் : @ZeeTamilNews
டெலிகிராம் : https://t.me/ZeeTamilNews