காலையில் எழுந்தவுடன் பல் துலக்குதல் முதல் குளியல் வரை, பின்னர் மாலையில் வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த உடன் கை, கால் கழுவுதல் என இதனை தங்களது அன்றாட வாழ்வாக வைத்துக்கொள்ள வேண்டும் என சிறுவயதில் வீட்டில் தொடங்கி பள்ளி வகுப்பு வரை அனைவரும் நமக்கு கற்பித்து வருகின்றனர்.
உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், தலைமுடியை சீராக வைத்தல் என சுகாதாரம் என்பது மிக அவசியமான ஒன்று. ஆனால், பலரும் நேரமின்மை, சோம்பல் காரணமாக உடலை சுத்தமாக வைத்துக்கொள்வதில் சிறு சமரசங்களை செய்வது வழக்கம்தான். இரண்டு நாள்களுக்கு ஒரு முறை குளிப்பது, துணிகளை துவைப்பதில் தாமதம் என பலவற்றை கூறலாம்.
மேலும் படிக்க | ஊபரில் சென்று வங்கியை கொள்ளை அடித்த திருடன் - சிங்கம் சூர்யாவாக மாறிய போலீஸ்!
பொதுவாக மற்றவர்களுக்கு தொந்தரவு அளிக்காத வரை பிரச்னை இல்லை என்றாலும், அடுத்தவர்களுக்கு சிறு தொந்தரவு அளித்தாலும் இது மிகப்பெரிய பிரச்னையாக உருமாறும்.
அந்த வகையில், தனது சக அறை தோழி 1 மாத காலமாக குளிக்காமல் இருந்ததால், அவரை அறையை விட்ட விரட்டிய பெண்ணின் கதை இணையத்தில் தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
23 வயதான பெண் ஒருவர் தனது ரெட்டிட் சமூக வலைதள பக்கத்தில்,"23 வயதான என்னுடன், 18 வயதான மற்றொரு பெண் வசித்து வருகிறாள். அவருக்கு ஒரு துளிக்கூட சுகாதாரம் குறித்து கவலையே கிடையாது. நான் மாதங்களாக நாங்கள் ஒரே அறையில் இருந்து வருகிறோம். ஆனால், இனி ஒரு நொடி கூட அவருக்கு என்னால் இருக்க முடியாது.
அவள் குளிக்கவே மாட்டாள். இந்த நான்கு மாதங்களில் ஒருமுறை கூட அவள் குளித்ததில்லை. இருப்பினும், தினமும் காலையில் இரண்டு மணிநேரம் ஜாக்கிங் போவாள். அவ்வாறு ஓடிவிட்டு வந்தும் குளிக்க மாட்டாள். அந்த கெட்ட நாற்றத்தை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அந்த வாடை எனது வயிற்றை பிரச்னை உண்டாக்குகிறது. நான் பலமுறை அவளிடம் பேசிவிட்டேன். உடனே, சரி குளிக்கிறேன் என்பால், ஆனால் குளித்ததே இல்லை.
இதனால், வேறு வழியின்றி நான் எனது வீட்டு உரிமையாளரை, வீட்டிற்கு கூப்பிட்டேன். அவர் அறைக்கு வந்தபோது, நாங்கள் இருவரும் இருந்தோம். அவர் உள்ள நுழைந்த அடுத்த நொடியே அவருக்கு வாந்தி வருவதுபோல் ஏற்பட்டுள்ளது.
அப்போது, தான் எனது கஷ்டம் என்ன என்று அவருக்கு புரிந்து உள்ளது. உடனே அந்த பெண்ணை அழைத்து, இன்னும் 30 நாள்களுக்குள் அறையை காலி செய்யும்படி கூறினார். இல்லையென்றால், வலுகட்டாயமாக வெளியே அனுப்ப வேண்டியதாக இருக்கும் என எச்சரித்தார்" என பதிவிட்டுள்ளார்.
இதனை பதிவிட்ட பின் அவர், அந்த பெண்ணை வெளியே அனுப்பியது தவறா எனவும் சந்தேகம் எழுப்பியுள்ளார். ஆனால், அனைவரும் நீங்கள் செய்தது சரியே என கருத்து தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர்,'உங்களின் அறை தோழி மிகவும் அதிர்ஷ்டசாலி. அந்த வீட்டுக்கு இவ்வளவு பெரிய சேதாரத்தை ஏற்படுத்திய பின்னரும் உங்கள் வீட்டு உரிமையாளர் அவர் மீது வழக்குப்போடவில்லையே' என வேடிக்கையாக கமெண்ட் செய்துள்ளார்.
மேலும் படிக்க | சொந்த மகளை திருமணம் செய்த மத போதகர்... மொத்தம் 20 மனைவிகள் - அதிர்ந்த FBI
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ