Karnataka Bus Driver Heart Attack: பரபரப்பான சிசிடிவி காட்சிகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆக பரவுவது வாடிக்கையானதுதான். அந்த வகையில், சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த ஒரு பரபரப்பான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது அதிகமானோரால் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. தறிகெட்டு ஓடிய பேருந்தில் இருந்து பயணிகளை நடத்துநர் காப்பாற்றிய அந்த வீடியோ பார்ப்போரை பதற்றத்திற்கும், வியப்பிற்கும் ஆளாக்கியது எனலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் பேருந்து ஓட்டிக்கொண்டிருந்தபோது, ஓட்டுநருக்கு மாரடைப்பு வந்துள்ளது. இதனால் பேருந்து அவரது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. உடனே விவேகமாக செயல்பட்ட நடத்துநர், அந்த பேருந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, பயணிகளின் உயிரை காப்பாற்றினார். தற்போது அந்த பேருந்தில் இருந்த சிசிடிவி கேமரா இந்த சம்பவத்தை பதிவு செய்துள்ளது. இந்த சிசிடிவி வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


பயணிகளை காப்பாற்றிய நடத்துநர்


அந்த 1 நிமிடம் 53 வினாடிகள் கொண்ட வீடியோவில், ஓட்டுநர் பேருந்தை இயல்பாக ஓட்டிசெல்கிறார். ஒரு நிமிடம் கழித்து அவர் இருக்கையில் இருந்து சரிந்து விழ, அந்த பேருந்து சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தின் பக்கவாட்டில் மோதியப்படி சென்றது. பேருந்து மோதிய உடனேயே அந்த பேருந்து நடத்துநர், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தார். ஒருவேளை அங்கு மற்றொரு பேருந்து இல்லாமல் போயிருந்தால் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கலாம். நல்வாய்ப்பாக அங்கு பேருந்து இருந்ததால், அதில் மோதிய உடனேயே நடத்துநர் உஷாராகிவிட்டார்.