Shocking Crime In India: புனேவில் உள்ள கங்கா சாட்டிலைட் ஹவுசிங் சொசைட்டியில் கடந்த நவம்பர் 24ஆம் தேதி 36 வயதான ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நிகில் கன்னா என்ற தொழிலதிபர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரேணுகா ஜாகர் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ரேணுகா தனது பிறந்தநாளை துபாய் சென்று கொண்டாட ஆசைப்பட்டுள்ளார். தனது பிறந்தநாளான செப்டம்பர் 18ஆம் தேதி கணவரை துபாய் அழைத்துச்செல்ல சொல்லியும் அவர் அதனை செய்யவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்ததாக கடந்த நவம்பர் 5ஆம் தேதி இந்த தம்பதிக்கு திருமண நாள் வந்துள்ளது. அதற்கு நிகில் தனக்கு விலையுயர்ந்த பரிசுப்பொருள் வாங்கித்தருவார் என ரேணுகா காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதையும் நிகில் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன் - மனைவிக்கு இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. 


கடுமையாக தாக்கிய மனைவி


அதன் தொடர்ச்சியாக ரேணுகா தனது சகோதரரின் மகள் பிறந்தநாளுக்கு டிசம்பர் மாதம் டெல்லி செல்ல வேண்டும் என்று கணவரின் கேட்டுள்ளார். அதற்கும் நிகில் முறையான பதில் அளிக்கவில்லை. இந்த சூழலில் கடந்த நவம்பர் 24ஆம் தேதி ரேணுகா - நிகில் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த முறை வாய்ச்சண்டை கைகலப்பாக மாறியுள்ளது. 


மேலும் படிக்க | தங்கைக்கு அக்கா செய்த கொடுமை... காதலன் கைது - நடந்தது என்ன?


அப்போது திடீரென ரேணுகா தனது கணவர் நிகில் முகத்தில் கடுமையாகவும் வேகமாகவும் கைகளால் குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்த நிகிலின் மூக்கு மற்றும் வாயில் இருந்து பொலபொலவென ரத்தம் கொட்டியுள்ளது. ரேணுகா குத்திய வேகத்தில் நிகிலின் தவடை உடைந்து சில பற்களும் கீழே விழுந்துள்ளது. சிறிது நேரத்தில் தனது சுயநினைவையும் அவர் இழந்துள்ளார்.


மனைவி கைது


அதன்பிறகு ரேணுகா நிகிலை எழுப்ப எவ்வளவோ முயன்றும் அவர் எழவில்லை. நிகில் - ரேணுகாவுடன் நிகிலின் பெற்றோரும் வசித்து வந்துள்ளனர். ஆனால் இந்த சம்பவம் நடக்கும் போது பெற்றோர் வீட்டில் இல்லை. உடனே தனது மாமனாருக்கு போன் செய்த ரேணுகா அவர் உதவியுடன் நிகிலை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே நிகில் உயிரிழந்துள்ளார். 


நிகில் மரணத்தை அடுத்து இந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பின் ரேணுகாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பேசிய போலீசார், ரேணுகா நிகிலை அடிக்கும் போது போதையில் இருந்ததாக சந்தேகிப்பதாகவும், மழுங்கிய ஆயுதத்தால் தாக்கி இருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளனர். இந்த தாக்குதலில் ரத்தம் அவரது சுவாசக்குழாய்க்கு சென்றதே அவரது இறப்பிற்கு முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


நீண்ட நாள் பிரச்னை?


நிகிலின் அப்பா பேசும் போது, திருமணம் ஆனது முதலே இருவருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்ததாகவும், ரேணுகா அனைவரிடமும் சண்டை போடும் மனநிலையிலேயே பேசியதாகவும் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த அன்று வீட்டுக்கு சென்று பார்த்தபோது தரையில், நிகில் ஆடைகள் இன்றி முகம் முழுவதும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும், அவருக்கு முதலுதவி அளித்தும் பயனலிக்காததால் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றதாகவும் கூறியுள்ளார். 


மேலும் படிக்க | சந்திரயான்-4 முதற்கட்ட சோதனை: இஸ்ரோ இலக்கு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ