Shocking: சினிமா பாணியில் உளவு, பாகிஸ்தானுக்கு ஆவணங்களை வழங்கிய காய்கறி வியாபாரி
கைது செய்யப்பட்ட காய்கறி வியாபாரி பேஸ் காம்பில் பணியில் இருந்த ஒரு இராணுவ அதிகாரியிடமிருந்து முக்கியமான ஆவணங்களைப் பெற்று அவற்றை பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ-க்கு வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
புதுடில்லி: திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு ஒரு உளவு நடவடிக்கை பற்றி தெரிய வந்துள்ளது. போக்ரானில் உள்ள ராணுவ தள முகாமிற்கு காய்கறி சப்ளை செய்யும் காய்கறி வியாபாரி ஒருவர், இந்திய ராணுவ வீரரிடமிருந்து முக்கியமான அவணங்களைப் பெற்று பாகிஸ்தானின் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ (இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ்) க்கு கசிய விட்டதாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
34 வயதான அந்த காய்கறி வியாபாரி, ஹபீப் கான் (ஹபீபுர் ரஹ்மான்) ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். செவ்வாயன்று போக்ரானில் டெல்லி போலீஸ் குற்றப்பிரிவு போலீஸ் குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தின் (Indian Army) ரகசிய ஆவணங்கள் மற்றும் இராணுவப் பகுதியின் வரைபடம் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லி போலீஸ் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
"அவர் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யில் பணிபுரிந்தார். அவரிடமிருந்து ராணுவத்தின் ரகசிய ஆவணங்கள் மற்றும் வரைபடங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆக்ராவில் பணியில் இருந்த ராணுவ வீரர் பரம்ஜித் கவுர் இந்த ஆவணங்களை அவருக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். காய்கறி வியாபாரி பாகிஸ்தானைச் சேர்ந்த கமல் என்றவருக்கு சப்ளையர் இந்த ஆவணங்களை ஒப்படைக்க வேண்டியிருந்தது” என்று குற்றப்பிரிவு மேலும் கேள்வி எழுப்பியுள்ளது.
ALSO READ:COVID-19: பயமுறுத்தும் ‘R factor’; மாநில அரசுகளை எச்சரிக்கும் மத்திய அரசு
தற்போது கைது செய்யப்பட்டுள்ள அந்த காய்கறி வியாபாரி, கடந்த சில ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் போக்ரான் (Pokhran) ராணுவ தள முகாமுக்கு காய்கறிகளை வழங்கி வருவதாக டெல்லி காவல்துறை அதிகாரி தெரிவித்தார். உளவுத்துறை பகிர்ந்த தகவல்களின் அடிப்படையில், டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு அந்த நபரை செவ்வாய்க்கிழமை போக்ரானில் கைது செய்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அந்த காய்கறி வியாபாரி பேஸ் காம்பில் பணியில் இருந்த ஒரு இராணுவ அதிகாரியிடமிருந்து முக்கியமான ஆவணங்களைப் பெற்று அவற்றை பாகிஸ்தானின் (Pakistan) உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ-க்கு வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
தான் வழங்கிய ஒவ்வொரு ஆவணம் மற்றும் தகவலுக்கும் அந்த இராணுவ அதிகாரிக்கு பணம் அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும், இந்த விவகாரம் இன்னும் விசாரணையில் உள்ளதாகவும், உண்மைகள் சரிபார்க்கப்படுவதாகவும் கூறிய காவல் துறை இது குறித்த மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.
ALSO READ: ISRO: ககன்யானின் விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றி; எலான் மஸ்க் வாழ்த்து
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR