Drone Alert: இந்திய தூதரக வளாகத்தில் ட்ரோன் இயக்கம், எச்சரிக்கையில் அதிகாரிகள்

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக குடியிருப்பு பகுதியில் வார இறுதியில் ஒரு ட்ரோனின் இயக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விஷயத்தைப் பற்றி இந்திய தரப்பு பாகிஸ்தான் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 2, 2021, 02:17 PM IST
  • இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக குடியிருப்பில் ட்ரோன் இயக்கம்.
  • அங்கு ஒரு அதிகாரப்பூர்வ நிகழ்வு நடந்துகொண்டிருந்த போது, இந்த ட்ரோனின் இயக்கம் காணப்பட்டது.
  • அதே நேரத்தில், இந்தியாவில், ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் முதல் ட்ரோன் தாக்குதல் நடந்தது.
Drone Alert: இந்திய தூதரக வளாகத்தில் ட்ரோன் இயக்கம், எச்சரிக்கையில் அதிகாரிகள் title=

புதுடெல்லி: இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக குடியிருப்பு பகுதியில் வார இறுதியில் ஒரு ட்ரோனின் இயக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விஷயத்தைப் பற்றி இந்திய தரப்பு பாகிஸ்தான் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக பரிமாறப்பட்ட ஒரு குறிப்பில், ட்ரோன் இயக்கம் காரணமாக எழும்பியுள்ள பாதுகாப்பு கவலைகளை பற்றி புது டெல்லி இஸ்லாமாபாத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. 

பாகிஸ்தானில் (Pakistan) இந்தியப் பணியகம் இருக்கும் இடத்தில் ட்ரோன் இயக்கம் காணப்படுவது இது முதன்முறையாகும். இங்கு ஒரு அதிகாரப்பூர்வ நிகழ்வு நடந்துகொண்டிருந்த போது, இந்த ட்ரோனின் இயக்கம் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் சனிக்கிழமையன்று (ஜூன் 26) நடந்தது. தற்செயலாக, அதே நேரத்தில், இந்தியாவில், ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் முதல் ட்ரோன் தாக்குதல் நடந்தது.  

இந்திய விமானப்படை ஜூன் 27 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜம்மு விமானப்படை நிலையத்தின் தொழில்நுட்பப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு குறைந்த தீவிர வெடிப்புகள் பதிவாகியுள்ளன. ஒரு தாக்குதலால், ஒரு கட்டிடத்தின் கூரையில் சிறிய சேதம் ஏற்பட்டது. மற்றொரு தாக்குதல் திறந்தவெளியில் நடந்தது" என்று கூறப்பட்டுள்ளது.

ALSO READ:Exclusive: ISIS பயங்கரவாதிகளாக மாறிய 24 பாகிஸ்தான் பெண்களின் பட்டியல் வெளியீடு

"எந்தவொரு உபகரணத்திற்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. சிவில் ஏஜென்சிகளுடன் விசாரணை நடந்து வருகிறது." என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ஜம்மு (Jammu) சம்பவத்திற்குப் பிரகு, இந்தியா விழிப்புணர்வை அதிகப்படுத்தியுள்ளது. அதே பிராந்தியத்தில் ட்ரோன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சில சம்பவங்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ட்ரோன்களின் பயன்பாடு சேதத்தையும் கண்காணிப்பையும் ஏற்படுத்த மலிவான தொழில்நுட்ப பயன்பாட்டு வழிமுறையாகக் கருதப்படுகிறது.

பயங்கரவாதிகள் ட்ரோன்களைப் பயன்படுத்தி இந்தியா மீது தாக்குதல் நடத்தியது பற்றி ஐக்கிய நாடுகள் சபையிலும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் இந்த விஷயத்தை எழுப்பிய உள்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் (உள் பாதுகாப்பு) வி.எஸ்.கே. கவுமுடி, "செயலுத்தி மற்றும் வணிகச் சொத்துக்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகளில் உறுப்பு நாடுகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்" என்று சுட்டிக்காட்டினார். மேலும், "எல்லைகளை தாண்டி ஆயுதங்களை கடத்த பயங்கரவாதிகள் UAS ஐப் பயன்படுத்துவதை நாங்கள் கண்டுள்ளோம்” என்று அவர் கூறினார்.

கடந்த மாதம் எஸ்சிஓ தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் (NSAs) கூட்டத்தில் பேசிய இந்திய என்எஸ்ஏ அஜித் டோவல் (Ajit Doval), ஆயுதக் கடத்தலுக்கு ட்ரோன்களின் பயன்பாடு, டார்க் வெப்பின் (Dark Web) தவறான பயன்பாடு உள்ளிட்ட, பயங்கரவாதிகள் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பங்களை கண்காணிக்க வேண்டும் என்று கூறினார்.

ALSO READ:  China on Armed Forces: சீன ஆயுதப்படைகளை விமர்சித்தால் தண்டனை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News