ஜான்சி: சிர்கான் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த பைரவ் தேரா கிராமத்தில் இருந்து மிகவும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளிசத்துக்கு வந்துள்ளது. கிணற்றில் விழுந்த ஒரு இளைஞனை வெளியே எடுத்தபின் திடீரென அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து கோப்ரா பாம்பு வெளியே வந்தபோது மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். உண்மையில், முகேஷ் குஷ்வாஹா என்ற இளைஞன் திடீரென கிணற்றில் விழுந்தான். அங்கிருந்த கிராமவாசிகள் அவனை கிணற்றிலிருந்து காப்பாற்றினார்கள். ஆனால் அந்த சமயத்தில் திடீரென்று அவரது பேண்டிலிருந்து கருப்பு நாகப்பாம்பு வேகமாக வெளியே வந்து படம் எடுத்து நின்றதை பார்த்த மக்களுக்கு அச்சம் ஒட்டிக்கொண்டது. இருப்பினும், அந்த பாம்புவால் இளைஞனுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை என்பது மகிழ்ச்சியான விசியமாகும.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிணற்றில் விழுந்த முகேஷின் தாயார் கூறுகையில், இந்த சம்பவத்தால் முகேஷ் மிகவும் அதிர்ச்சியடைந்து உள்ளார். மேலும் அவர் கிணற்றில் விழுந்ததால் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருந்தது என்று அந்த இளைஞனின் தாய் கூறினார். 


தகவல்களின்படி, இரவு நேரத்தில் பண்ணையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த இளைஞன் வயல்களுக்கு அருகிலுள்ள கிணற்றில் விழுந்ததான். அதாவது கிணற்றில் விழுந்ததும், அங்கிருந்த பல பாம்புகள் அவரை சூழ்ந்துக்கொண்டன. அவர் காணவில்லை என ஞாயிற்றுக்கிழமை கிராம மக்கள் தேடத்தொடங்கி உள்ளனர். அவர் கிணற்றில் கிடப்பதை கிராம மக்கள் பார்த்துள்ளனர். ஆனால் கிணற்றின் உள்ளே இருந்த காட்சியைப் பார்த்த கிராம மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர்.


உண்மையில் முகேஷைச் சுற்றி பல பாம்புகள் இருந்தன. கிராமவாசிகள் அவரை எப்படியாவது வெளியே எடுக்க வேண்டும் என இழுத்தனர். ஆனால் முகேஷின் பேண்ட்டில் ஒரு கருப்பு நாகம் காணப்பட்டபோது கிராமவாசிகளின் உணர்வுகள் பயத்தில் பறந்தன. ஒரு குச்சியின் உதவியுடன் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு கிராம மக்கள் அவரை வெளியே இழுத்தனர். கிணற்றில் விழுந்ததால் முகேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.