ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஜதராபாத்தில் உள்ள முசி ஆறு அருகே கடந்த 17-ம் தேதி பெண்ணின் தலை ஒன்று கிடந்துள்ளது. அந்த பகுதியின் தூய்மை பணியாளர்கள் துண்டிக்கப்பட்டு வீசப்பட்டிருந்த தலையை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தலை யாருடையது என விசாரணை மேற்கொள்ளும் போது தான் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தன. கிரைம் படங்களில் வரும் சம்பவங்களை போல ட்விஸ்டுகள் அவிழ்ந்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனுராதா என்பவரின் தலை தான் எனத் தெரியவந்துள்ளது. 55 வயதாகும் அவர் மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பே அவரது கணவர் உயிரிழந்துள்ளார். மகளும் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார். இந்த வழக்கில் கைதான சந்திரமெளலியின் தந்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அனுராதா வேலை பார்த்த மருத்துவமனையில் ஒரு சர்ஜரிக்காக சென்றுள்ளார். அப்படி தான் சந்திரமெளலிக்கு அனுராதா பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அனுராதா தனியாக இருந்ததை தெரிந்து கொண்ட சந்திரமெளலி தனது வீட்டில் அனுராதாவுக்கு தங்க இடம் கொடுத்துள்ளார். சைதன்யாபுரியில் உள்ள சந்திரமெளலி வீட்டின் கீழ் தளத்தில் அனுராதா வாடகைக்கு தங்கியுள்ளார்.


மேலும் படிக்க - Honey Trap செய்து மிரட்டிய கேரள பெண் அஸ்வதி அச்சு..! Fake ID-யிடம் சிக்கிய சின்ராசுகள்!


இவர்களுக்குள் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அனுராதாவிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சந்திரமெளலி 7 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளார். அதனை ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்து நஷ்டம் அடைந்துள்ளார். இந்த சூழலில் அனுராதா அதிக பிரஷர் கொடுத்து பணம் கேட்டுள்ளார். இதனால் கடுப்பான அவர், கடந்த 12-ம் தேதி அவரை கொலை செய்துள்ளார். அதோடு யாரும் கண்டுபிடிக்கக் கூடாதென அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் உள்ள பிரிட்ஜில் வைத்துள்ளார். கற்களை வெட்ட பயன்படுத்தப்படும் கட்டர் மூலம் அனுராதா உடலை பீஸ் பீஸாக வெட்டியுள்ளார்.


உடல் பாகங்களை தனித்தனியாக அழித்துவிட நினைத்துள்ளார். பிரிட்ஜில் இருந்து மோசமான வாடை வராமல் இருக்க பல கெமிக்கல்களையும் பயன்படுத்தியுள்ளார். அப்படி ஒவ்வொரு பாகமாக டிஸ்போஸ் செய்யும் போது, தலையை கடந்த 17-ம் தேதி மூசி ஆற்றில் தூக்கி வீசியுள்ளார். அதோடு அனுராதா இறந்தது யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக அவரது போனில் இருந்து அவருக்கு நெருக்கமானவர்களுக்கு போன் மூலம் மெசேஜ் செய்து சாட் செய்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இருக்கும் மகளிடமும் சாட் செய்துள்ளார். இதனால் அனுராதா இறந்ததே யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. 


இப்படிப்பட்ட சூழலில் தான் கடந்த 18-ம் தேதி அனுராதாவின் தலையை மூசி ஆற்றின் ஓரம் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின்னர் அந்த தலை யாருடையது என்று விசாரிக்கும் போது, சிசிடிவி கேமராவில் சந்திரமெளலி சிக்கியுள்ளார். அவர் ஆட்டோவில் கவரில் மறைத்து தலையை கொண்டு சென்றது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது தான் அவர், அனுராதாவை கொலை செய்ததே தெரியவந்தது. கொலை செய்துவிட்டு ஒரு வாரமாக அதனை மறைக்க அவர் செய்த கிரிமினல் வேலைகளை கேட்டு போலீசாரே அதிர்ந்துள்ளனர். உண்மையில் சந்திரமெளலி சொல்லி தான் அந்த தலை யாருடையது என்பதே தெரியவந்தது. படங்களை மிஞ்சும் அளவுக்கு கொலை செய்து அதனை மறைக்க ஒரு வாரம் பல தில்லாலங்கடி வேலைகளை செய்த சந்திரமெளலி கைது பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது இதுதான் போல.


மேலும் படிக்க - கடையை சூறையாடிய மதுபோதை கும்பல்! வெளியான சிசிடிவி காட்சிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ