காட்டில் நடந்த கொடூரம்; உடும்பை பலாத்காரம் செய்த 4 பேர் கைது
மகாராஷ்டிராவின் சஹ்யாத்ரி புலிகள் காப்பகத்தில், சில வேட்டையாட வந்த நபர்கள் செய்த அருவெருப்பான செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் கோதனே கிராமத்திற்கு அருகிலுள்ள சஹ்யாத்ரி புலிகள் காப்பகத்தில் உடும்பை பாலியல் பலாத்காரம் செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள், வேட்டையாடுபவர்கள் என அடையாளம் காணப்பட்ட நிலையில், கோத்தானேவின் காபா பகுதியில் உள்ள சஹ்யாத்ரி புலிகள் காப்பகத்தின் மையப் பகுதிக்குள் நுழைந்து, இந்த கொடூரமான குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் நடந்த கொடூரம்
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சந்தீப் துக்காராம், பவார் மங்கேஷ், ஜனார்தன் கம்டேகர் மற்றும் அக்ஷய் சுனில் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிர வனத்துறையினர் குற்றவாளிகளின் செல்போனை சோதனையிட்டதில் சம்பவம் குறித்து தெரிய வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் உடும்பை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் செயலின் பதிவை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
மேலும் படிக்க | Viral Video: கழுகு குஞ்சு பொரிக்கும் அற்புத காட்சி; படம் பிடித்த ரகசிய கேமரா
சிசிடிவி காட்சிகள் மூலம் பிடிப்பட்ட குற்றவாளி
சாங்லி வனச்சரகத்தில் (Sangli Forest Reserve) நியமிக்கப்பட்ட வன அதிகாரிகள், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தனர். அதில் அவர்கள் காட்டில் சுற்றித் திரிவதைக் காணலாம். சம்பவம் குறித்த விரிவான தகவல்களை அளித்த அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்ட மூவரும் கொங்கனில் இருந்து கோலாப்பூரில் உள்ள சந்தோலி கிராமத்தில் வேட்டையாட வந்ததாக தெரிவித்தனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை
இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள வனத்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 1972 வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், உடும்பு விலங்கு இருப்பதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
மேலும் படிக்க | Viral Video: ஆக்ரோஷமாக சண்டையிடும் சிறுத்தைகள்; இது இரைக்கான போராட்டம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR