புதுடெல்லி: PM Kisan: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் எட்டாவது தவணையை மே 14 அன்று அரசாங்கம் வெளியிட்டது. நாட்டின் 9.5 கோடி விவசாயிகளின் கணக்குகளில் 2000 ரூபாய் செலுத்தப்பட்டது. அதாவது சுமார் 20,000 கோடி ரூபாய் விவசாயிகளின் கணக்குகளில் அரசாங்கத்தால் டெபாசிட் செய்யப்பட்டது. பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டமானது நாட்டின் குறு மற்றும் ஏழை விவசாயிகளுக்கு நேரடி பொருளாதார நன்மைகளை வழங்கும் அரசாங்கத்தின் ஒரு மிக முக்கிய மற்றும் நல்ல திட்டமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தகுதியற்றவர்களும் PM Kisan திட்ட பயன்களை பயன்படுத்திக் கொண்டனர்
எனினும், இந்தத் திட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது பற்றி தெரிய வந்தது. இந்த திட்டத்துக்கு தகுதி இல்லாத சில விவசாயிகளும் இந்தத் திட்டத்தின் நன்மைகளை பெறுவதாக பல புகார்கள் பெறப்பட்டன. இதைக் கருத்தில் கொண்டு, தகுதியற்ற விவசாயிகளை இந்தத் திட்டத்திலிருந்து விலக்க அரசாங்கம் முடிவு செய்ததுடன், திட்டத்தின் நிபந்தனைகளையும் மாற்றியது.


PM Kisan திட்டத்தின் நிபந்தனைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள்
நீங்களும் ஒரு விவசாயியாக இருந்து, நீங்கள் PM Kisan திட்டத்துக்கு தகுதி பெற்றவரா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமானால், அரசாங்கம் வகுத்துள்ள நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்கிறீர்களா என்பதை சரி பார்த்துக்கொள்ளலாம். இதில் ஒரு நிபந்தனை பூர்த்தி ஆகாவிட்டால் கூட, நீங்கள் இந்த திட்டத்துக்கு தகுதி பெற முடியாது. இந்த திட்டத்துக்கு தகுதி பெறாமல், திட்டத்தின் பயனை நீங்கள் பெற்றிருந்தால், அரசாங்கம் உங்களிடமிருந்து பணத்தை மீட்டெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் என்ன என்பதை புரிந்துகொள்வது முக்கியமாகும்.


பிரதமர் கிசான் திட்டத்தின் நிபந்தனைகள் என்ன
1. பிரதமர் கிசான் சம்மான் நிதியின் (PMKSY) பயன்களைப் பயன்படுத்திக்கொள்ள, விவசாயிகளின் பெயரில் விவசாய நிலங்கள் வைத்திருப்பது கட்டாயமாகும். உங்களிடம் நிலம் இல்லையென்றால் இந்த திட்டத்தின் பலனை நீங்கள் பெற முடியாது.
2. 2 ஹெக்டேர் விவசாய நிலம் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே இந்த திட்டத்தின் நன்மை கிடைக்கும்.
3. இப்போது அரசாங்கம் வரம்பை ரத்து செய்துள்ளது. யாரது பெயரில் சாகுபடி நிலம் உள்ளதோ பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியின் தவணையும் அவர்களுக்கு தான் கிடைக்கும். 
4. வருமான வரி வருமானத்தை (ஐ.டி.ஆர் தாக்கல்) தாக்கல் (ITR Filing) செய்பவர்களுக்கு, பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனாவின் நன்மை கிடைக்காது. உதாரணமாக, வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பட்டய கணக்காளர்கள் போன்றோர் இந்த திட்டத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளார்கள். 
5. இப்போது வரை, இந்த திட்டத்தின் பயன் கூட்டுக் குடும்ப விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டது. கூட்டுக் குடும்பங்களுக்கான திட்டத்தின் நிபந்தனைகளையும் மத்திய அரசு மாற்றியுள்ளது.
6. இப்போது கூட்டுக் குடும்பத்தின் விவசாயிகள் தங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட நிலத்தின் விவரங்களை கொடுக்க வேண்டும்.


ALSO READ: PM Kisan: ரூ.2000 பணம் உங்களுக்கு வரலயா? உடனே இதைப் பண்ணுங்க!


7. ஒரு விவசாயி தனது குடும்ப நிலத்தில் விவசாயம் செய்தால், குடும்பத்தில் யார் பெயரில் விவசாய நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அந்த விவசாயிக்குதான் இந்தத் திட்டத்தின் பலன் கிடைக்கும். 
8. இத்திட்டத்தைப் பயன்படுத்த, கூட்டு குடும்ப விவசாயிகள் தங்கள் நிலத்தின் பங்கை தங்கள் பெயரில் பதிவு செய்ய வேண்டும்.
9. அரசியலமைப்பு பதவிகளில் இருப்பவர்கள் அல்லது கடந்த காலங்களில் இந்த பதவிகளை வகித்தவர்கள் இந்த திட்டத்தின் பலனைப் பெற மாட்டார்கள்.
10. முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள் / மாநில அமைச்சர்கள் / மக்களவை உறுப்பினர்கள் / மாநிலங்களவை உறுப்பினர்கள் / விதான் சபா உறுப்பினர்கள் ஆகியோரும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க மாட்டார்கள். 
11. மாநகராட்சியின் முன்னாள் அல்லது தற்போதைய மேயர், மாவட்ட பஞ்சாயத்துகளின் முன்னாள் அல்லது தற்போதைய தலைவர்கள் ஆகியோரும் இந்த திட்டத்திற்கு தகுதி பெற முடியாது.
12. ரூ .10,000 அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெரும் ஓய்வூதியதாரர்கள் இந்த திட்டத்திலிருந்து விலக்கிவைக்கப் பட்டுள்ளார்கள்.


ALSO READ: விவசாயிகள் கணக்கில் 19000 கோடி செலுத்தப்படும். நீங்கள் பட்டியலில் இருக்கிறீர்களா இல்லையா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR