PM Kisan: விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் எட்டாவது தவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் 8 வது தவணையை மார்ச் மாத இறுதியில் அரசாங்கம் வெளியிடக்கூடும். இத்திட்டத்தின் ஏழாவது தவணை 2020 டிசம்பர் 20 அன்று வெளியிடப்பட்டது.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 6000 ரூபாய் விவசாயிகளுக்கு நிதி உதவியாக அளிக்கப்படுகின்றது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகின்றது.
விவசாயிகள் (Farmers) 3 தவணைகளில் தொகையைப் பெறுகிறார்கள்
இந்த தொகை ஒரு வருடத்தில் மூன்று தவணைகளில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகள் இந்தத் தொகையை 2000 ரூபாயின் மூன்று தவணைகளில் பெறுகிறார்கள். அதாவது, ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும், விவசாயிகளின் கணக்குகளில் இந்த தொகை போடப்படுகின்றது. முதல் தவணை ஏப்ரல்-ஜூலை மாதங்களில் வழங்கப்படுகிறது. இரண்டாவது தவணை ஆகஸ்ட்-நவம்பர் மாதங்களிலும், மூன்றாவது தவணை டிசம்பர்-மார்ச் மாதங்களிலும் வெளியிடப்படுகிறது.
PM Kisan-னில் உங்கள் நிதி உதவி குறித்த நிலையை இந்த வகையில் தெரிந்து கொள்ளலாம்
நீங்களும் இந்தத் திட்டத்தின் பயனாளியாக இருந்து, உங்களுக்கு 8 வது தவணையில் வெளியிடப்பட்ட தொகை கிடைக்குமா இல்லையா என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றால், அரசாங்க பட்டியலில் உங்கள் பெயரை எளிதாக சரிபார்க்கலாம்.
1. முதலில் PM Kisan-னின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://pmkisan.gov.in/ -க்குச் செல்லுங்கள்.
2. இங்கே நீங்கள் வலது பக்கத்தில் 'Farmers Corner' என்ற ஆப்ஷனைக் காண்பீர்கள்.
3. இங்கே 'Beneficiary Status’ ஆப்ஷனை கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, புதிய பக்கம் திறக்கும்.
4. புதிய பக்கத்தில், ஆதார் எண், வங்கி கணக்கு எண் அல்லது மொபைல் எண்ணிலிருந்து ஏதாவது ஒரு ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த மூன்று எண்கள் மூலம் உங்கள் கணக்கில் பணம் வருகிறதா இல்லையா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம்.
5. நீங்கள் தேர்ந்தெடுத்த ஆப்ஷனின் எண்ணிக்கையை நிரப்பவும். இதற்குப் பிறகு, 'Get Data' என்பதைக் கிளிக் செய்யவும்.
6. அதைக் கிளிக் செய்தவுடன் அனைத்து பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களையும் பெறுவீர்கள். உங்கள் கணக்கில் எந்த தவணை (Installment) எப்போது வந்தது, எந்த வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது என்பது போன்ற தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும்.
7. இங்கு எட்டாவது தவணை தொடர்பான தகவல்களையும் நீங்கள் பெறுவீர்கள்.
8. FTO is generated and Payment confirmation is pending என்ற செய்தியை நீங்கள் பார்த்தால், நிதி பரிமாற்ற செயல்முறை தொடங்கி விட்டது என்று பொருள். இந்த தவணை சில நாட்களில் உங்கள் கணக்கில் வரும்.
மொபைல் செயலியின் மூலமும் சரிபார்க்கலாம்
PM KISAN க்கான மொபைல் செயலியும் உள்ளது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். அதன் பிறகு அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்த பிறகு உங்கள் நிலை குறித்து நீங்கள் எப்போதும் புதுப்பிக்கப்படுவீர்கள்.
ALSO READ: Kisan Samman Nidhi: பெறும் குழப்பம்! பெரும்பாலான விவசாயிகளுக்கு 7வது தவணை அடையவில்லை!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR