Richest MLA In India: நாட்டின் மிகப் பெரிய பணக்கார எம்எல்ஏவுக்கு சுமார் ரூ. 1,400 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. அதே நேரத்தில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவரின் பெயரில் ரூ. 2 ஆயிரம் மதிப்பில் கூட சொத்து இல்லை என்று ஒரு குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகாவின் துணை முதல்வராகவும், கர்நாடக காங்கிரஸ் தலைவருமான டி. கே. சிவகுமார் தான் இந்தியாவின் பணக்கார சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார். கடந்த மே மாதம் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சி கைப்பற்றியது. அதன்பின், கர்நாடகாவின் துணை முதல்வராகப் டி.கே. சிவகுமார் பதவியேற்றார். அவரது சொத்து மதிப்பு ரூ. 1,413 கோடி என தெரிவிக்கப்ட்டுள்ளது.


Association of Democratic Reforms அமைப்பு இந்த அறிக்ககையை வெளியிட்டுள்ளது. அதாவது, நாட்டின் முதல் 20 பணக்கார எம்எல்ஏகளையும், 20 ஏழை எம்எல்ஏக்களையும் இந்த அறிக்கையில் பட்டியிட்டுள்ளது. 


காங்கிரஸ் கட்சியின் டி.கே. சிவகுமார் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். அவருக்கு அடுத்தடுத்து 2ஆவது, 3ஆவது இடங்களிலும் கர்நாடக எம்எல்ஏக்களே இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் சுயேச்சை எம்எல்ஏவான கேஎச் புட்டஸ்வாமி கவுடா ரூ. 1,267 கோடி சொத்துக்களைக் கொண்டு இரண்டாவது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸின் பிரியா கிருஷ்ணா ரூ. 1,156 கோடியுடன் உள்ளார். இந்த முதல் 10 பணக்கார மற்றும் குறைந்த சொத்து மதிப்புள்ள எம்எல்ஏக்கள் பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து ஒருவரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு பட்டியலையும் இங்கு காணலாம்.  


மேலும் படிக்க | Manipur Video: பெண்கள் மீதான கொடூர வன்முறைக்கு போலி செய்தி தான் காரணம் - வெளியான உண்மை!


பணக்கார எம்எல்ஏக்களின் பட்டியல்


1) டி.கே. சிவக்குமார் (காங்கிரஸ்): கனகபுரா, கர்நாடகா 2023. மொத்த சொத்து மதிப்பு ₹1,413 கோடி.


2) கே.ஹெச். புட்டஸ்வாமி கவுடா (சுயேட்சை): கௌரிபிதனூர். கர்நாடகா 2023; மொத்த சொத்து மதிப்பு ரூ. 1,267 கோடி.


3) பிரியகிருஷ்ணா (காங்கிரஸ்): கோவிந்தராஜநகர், கர்நாடகா 2023. மொத்த சொத்து மதிப்பு ரூ. 1,156 கோடி.


4) என் சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம் கட்சி): குப்பம், ஆந்திரப் பிரதேசம் 2019. மொத்த சொத்து மதிப்பு ரூ. 668 கோடி.


5) ஜெயந்திபாய் சோமாபாய் படேல் (பாஜக): மான்சா, குஜராத் 2022. மொத்த சொத்து மதிப்பு ரூ. 661 கோடி.


6) சுரேஷ் பிஎஸ் (காங்கிரஸ்): ஹெப்பல், கர்நாடகா 2023. மொத்த சொத்து மதிப்பு ரூ. 648 கோடி.


7) ஜெகன் மோகன் ரெட்டி (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்): புலிவெந்த்லா, ஆந்திரப் பிரதேசம் 2019. மொத்த சொத்து மதிப்பு ரூ. 510 கோடி.


8) பராக் ஷா (பாஜக): காட்கோபர் கிழக்கு, மகாராஷ்டிரா 2019;.மொத்த சொத்து மதிப்பு ரூ. 500 கோடி


9) டி.எஸ். பாபா (காங்கிரஸ்): அம்பிகாபூர், சத்தீஸ்கர் 2018. மொத்த சொத்து மதிப்பு ரூ. 500 கோடி


10) மங்கள் பிரபாத் லோதா (பாஜக): மலபார் ஹில், மகாராஷ்டிரா 2019. மொத்த சொத்து மதிப்பு ரூ. 441 கோடி.


நாட்டின் 20 பணக்கார எம்எல்ஏக்களில் 12 பேர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள். 14%, பில்லியனர்கள் மற்றும் குறைந்தபட்சம் ₹ 100 கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்ட எம்.எல்.ஏ.க்களின் அதிக சதவீதமும் கர்நாடகாவில் உள்ளது. அந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் மாநிலம் அருணாச்சல பிரதேசம், 59 எம்எல்ஏக்களில் 4 பேர் அதில் உள்ளனர்.


மிகக்குறைந்த சொத்துக்கள் கொண்ட எம்எல்ஏக்களின் பட்டியல்


1) நிர்மல் குமார் தாரா (பாஜக): சிந்து (SC), மேற்கு வங்கம் 2021. மொத்த சொத்து மதிப்பு ரூ. 1,700.


2) மகரந்த முதுலி (சுயேட்சை): ராயகடா, ஒடிசா 2019. மொத்த சொத்து மதிப்பு ரூ. 15,000.


3) நரிந்தர் பால் சிங் சவ்னா (ஆம் ஆத்மி): ஃபசில்கா, பஞ்சாப் 2022. மொத்த சொத்து மதிப்பு ரூ. 18,370.


4) நரிந்தர் கவுர் பராஜ் (ஆம் ஆத்மி): சங்ரூர், பஞ்சாப் 2022; மொத்த சொத்து மதிப்பு ரூ. 24,409.


5) மங்கள் கலிந்தி (JMM): ஜுக்சலை (SC), ஜார்கண்ட் 2019. மொத்த சொத்து மதிப்பு ரூ. 30,000.


6) புண்டரிகாக்ஷ்ய சாஹா (AITC): நபத்விப், மேற்கு வங்காளம் 2021. மொத்த சொத்து மதிப்பு ரூ. 30,423.


7) ராம் குமார் யாதவ் (காங்கிரஸ்): சந்திராபூர், சத்தீஸ்கர் 2018. மொத்த சொத்து மதிப்பு ரூ. 30,464.


8) அனில் குமார் அனில் பிரதான் (சமாஜ்வாடி): சித்ரகூட், உத்தரப் பிரதேசம் 2022. மொத்த சொத்து மதிப்பு ரூய 30,496.


9) ராம் டாங்கோர் (பாஜக): பந்தனா (ST), மத்தியப் பிரதேசம் 2018. மொத்த சொத்து மதிப்பு ரூ. 50,749.


10) வினோத் பிவா நிகோல் (சிபிஎம்ஐ): தஹானு (ST), மகாராஷ்டிரா 2019. மொத்த சொத்து மதிப்பு ரூ. 51,082.


மேலும் படிக்க | Good News: வருமான வரி ரீஃபண்ட் பணம் வர தொடங்கியது.. நீங்கள் ITR தாக்கல் செய்தீர்களா இல்லையா?
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ