திருவனந்தபுரம்: மார்ச் மாதத்தில், கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட லாக்டௌனிற்குப் பிறகு, பொதுமக்களுக்காக மூடப்பட்டிருந்த கேரளாவில் (Kerala) உள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் (Shri Padmanabhaswamy Temple) ஆகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை முதல் பக்தர்களுக்காக திறக்கப்படும். மிகவும் பழமை வாய்ந்த, புகழ்பெற்ற இக்கோயிலுக்கு வருகை தர விரும்பும் மக்களுக்கு, தரிசனம் செய்யப்படும் நேரங்கள் மற்றும் பிற வழிகாட்டுதல்களை கோயில் அதிகாரிகள் அறிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலின் நிர்வாகத்தின்படி, பக்தர்கள் காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் மாலை தீபரதனை நேரம் வரையும் கோயில் வளாகத்திற்குள் வர அனுமதிக்கப்படுவார்கள்.


பக்தர்கள் தரிசனத்திற்கு ஒரு நாள் முன்னதாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கோயிலுக்கு வரும்போது, பதிவு படிவம் மற்றும் ஆதார் அட்டையின் நகலை பக்தர்கள் வைத்திருக்க வேண்டும்.


ஒரு நேரத்தில் 35 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு நாளில் 665 பேர் மட்டுமே கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.


ALSO READ: வைஷ்ணோ தேவி கோயில்: நாளை முதல் ஆன்லைன் புக்கிங், ஹெலிகாப்டர் புக்கிங் துவக்கம்!!


குறிப்பாக, மத்திய சுகாதார அமைச்சகத்தின் (Union Health Ministry) வழிகாட்டுதல்களின்படி, 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உடல் நலக் கோளாறு உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் வீட்டிலேயே தங்கியிருக்கவும், வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


வழிபாட்டுத் தலங்களுக்கான மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள்:


நுழைவாயிலில் கட்டாயமாக ஹேண்ட் சானிட்டைசர் டிஸ்பென்சர் மற்றும் உடல் வெப்ப ஸ்கேனர்களுக்கான ஏற்பாடுகள் இருக்க வேண்டும்.


முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே மக்களுக்கு நுழைவு அனுமதிக்கப்படும்.


ஷூக்கள் / பாதணிகள் ஆகியவற்றை சொந்த வாகனத்திற்குள்ளேயே விட்டுவிட்டு வருவது நல்லது.   தேவைப்பட்டால் அவை ஒவ்வொரு தனிநபருக்கும் / குடும்பத்துக்கும் தனித்தனி இடங்களில் வைக்கப்பட வேண்டும்.


நுழைவதற்கு வரிசையில் நிற்கும்போதும், எல்லா நேரங்களிலும் குறைந்தபட்சம் 6 அடி தனி மனித இடைவெளியை பராமரிக்க வெண்டும்.


மக்கள் வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு கை, கால்களை சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.


சிலைகள், புனித புத்தகங்கள் போன்றவற்றைத் தொடுவது அனுமதிக்கப்படக்கூடாது.


பிரசாத விநியோகம் அல்லது புனித நீரைத் தெளித்தல் போன்ற எதற்கும் அனுமதி இல்லை. 


ALSO READ: கொரோனா தொற்று.....திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழக்கம்போல் தரிசிக்கலாம்