Rihana vs Kangana Ranaut: டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு பாப் உலகின் இளவரசி மற்றும் பிரபல ஹாலிவுட் நட்சத்திரமுமான ரிஹானா (Singer Rihanna) ஆதரவு தெரிவித்துள்ளார். அதுக்குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர் மட்டுமில்லாமல், உலகப் புகழ் பெற்ற இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்கும் (Greta Thunberg), தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இவர்களின் ஆதரவு ட்வீட், இன்று இந்திய ஊடகங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. அதேநேரத்தில் விவசாயிகள் போராட்டமும் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசுக்கு மேலும் அழுத்தங்களை தரக்கூடும் எனத் தெரிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை (Indian Agriculture Act 2020) திரும்ப பெற வேண்டும். அந்த சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி, கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக லட்சக்கணக்காண விவசாயிகள் தேசிய தலைநகரம் டெல்லி எல்லையில் (Delhi Border) போராட்டம் செய்து வருகின்றனர். அமைதியாக நடந்து வந்த போராட்டம், குடியரசு தினமான சனவரி 26 ஆம் தேதி டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அதில் வன்முறை ஏற்பட்டது. டெல்லியில் பல பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டது. இன்னுமும் சில பகுதிகள் இணைய சேவை தடை (Internet Suspended) செய்யப்பட்டு உள்ளது. 


ALSO READ |  விவசாயிகள் போராட்டம் குறித்த ட்வீட் ... கங்கனாவிற்கு எதிராக போலீஸார் வழக்கு பதிவு


மேலும் வரும் சனிக்கிழமை நாடு தழுவிய அளவில் சாலை மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட உள்ளனர். இதனை தடுக்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பிரபல ஹாலிவுட் பாப் பாடகி ரிஹானாவின் (Singer Rihanna) கருத்து பெரும் கவனத்தை பெற்றுள்ளது.


 



அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த போராட்டம் குறித்து ஏன் நாம் பேசவில்லை?" எனப் பதிவிட்டிருந்தார். உலகம் முழுவதும், இந்த ட்விட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து ரிஹானாவின் கருத்துக்குப் பதிலடி தரும் வகையில், கண்டபடி பேசியுள்ளார் நடிகை கங்கனா ரணாவத். 


ALSO READ |  புரட்சி கீதமாக மாறிய பாப் நாயகி Rihanna-வின் பாடல்!


நடிகை கங்கனா ரணாவத் (Kangana Ranaut) தனது ட்விட்டில், "விவசாயிகள் போராட்டம் குறித்து யாரும் பேசவில்லை. ஏனென்றால் அவர்கள் விவசாயிகள் அல்ல. அவர்கள் தீவிரவாதிகள். அவர்கள் இந்தியாவைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகள். அவர்கள் இந்தியாவைப் பிரித்து, சீனாவின் ஆதிக்கத்தை ஓங்க வைக்கப் பார்க்கின்றனர். அமெரிக்காவை சீனாவின் காலனியாக மாற்றியது போலவே இங்கேயும் செய்யப் பார்க்கிறார்கள். நாங்கள் உங்களை போல் எங்கள் தேசத்தை விற்பனை செய்வதில்லை. இதுகுறித்து நீங்கள் பேச வேண்டாம். அமைதியாக இருங்கள் முட்டாளே என்று சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டுள்ளார். நடிகை கங்கனாவின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


 



ALSO READ |  ஹீரோவுடன் படுத்த பிறகு...அதுவும் 2 நிமிட ரோல்..கொந்தளித்த கங்கனா!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR