இந்திய சீனா எல்லையில் நிலைமை ”தீவிரம்” : ராணுவ தலைவர் நராவனே
லடாக் (Ladakh) செக்டாரில் சீனாவுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பாங்காங் த்சோவின் (Pangong Tso) தென் பகுதியில் சீன மேற்கொண்ட அத்துமீறலை முறியடித்து, இந்தியா மிக உயரமான முக்கிய பகுதிகளை கைப்பற்றி வலுவான நிலையில் உள்ளது.
லடாக் (Ladakh) செக்டாரில் சீனாவுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பாங்காங் த்சோவின் (Pangong Tso) தென் பகுதியில் சீன மேற்கொண்ட அத்துமீறலை முறியடித்து, இந்தியா மிக உயரமான முக்கிய பகுதிகளை கைப்பற்றி வலுவான நிலையில் உள்ளது.
சீனாவுடனான (China) தற்போதைய எல்லை பதட்டத்தை மறுஆய்வு செய்ய லே பகுதிக்கு சென்ற ராணுவத் தலைவர் எம்.எம்.நராவனே (MM Naravane), வெள்ளிக்கிழமை அன்று, எல் ஏசி பகுதியில் நிலைமை "தீவிரமானது" என்றும், இந்திய இராணுவம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது எனவும் கூறினார்.
லடாக் (Ladakh) செக்டாரின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்ய நார்வானே வியாழக்கிழமை லே சென்றார், லே பகுதியில் இந்தியா(India) மற்றும் சீன படைகள் கிட்டத்தட்ட 100,000 வீரர்கள் மற்றும் ஆயுதங்களை முன்னணி இடங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் நிறுத்தியுள்ளன.
இந்திய சீன எல்லை பகுதியில் மூன்று மாதங்களுக்கும் மேலாக நிலைமை பதற்றமாகத் தான் உள்ளது. ஆனால், நிலைமையைத் தீர்க்க இராணுவ மற்றும் ராஜீய நிலையில் த்தில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ராணுவத் தலைவர் தெரிவித்தார்.
எல்லைப் பிரச்சினையை முழுமையாகத் தீர்க்க பேச்சுவார்த்தைகள் உதவும் என்று நான் நம்புகிறேன்" என்று நர்வானே கூறினார். “வீரர்கள் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க முழுமையாக தயாராக உள்ளனர் என்றார். "நமது ராணுவத்தினர் உலகின் மிகச்சிறந்த வீரர்கள், அவர்கள் இராணுவதிற்கு பெருமைப் சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் தேசத்தையும் பெருமைப்படுத்துவார்கள்." என்றார்.
மேலும் படிக்க | லடாக்கில் வலுவான நிலையில் இந்தியா... Pangong Tso தெற்கு பகுதி ஏன் முக்கியமானது..!!!
சீன ராணுவம் இந்திய நிலப்பரப்பைக் கைப்பற்றுவதைத் தடுக்க இந்திய இராணுவம் பாங்காங் ஏரியின் தென் கரையில் முக்கிய உயரங்களை ஆக்கிரமித்த பின்னர் முக்கியமானபகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது.
இரு தரப்பின் பிரிகேடியர் கமாண்டர் நிலையிலான அதிகாரிகள் பதற்றத்தை குறைக்க பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். ஆனால், பேச்சு வார்த்தைகளில் எந்த வித பயனும் இல்லை.
மேலும் படிக்க | சீனாவின் எதிர்ப்பை மீறி தென் சீனக் கடலில் நிறுத்தப்பட்ட இந்திய போர்க்கப்பல்...!!!