மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி டெல்லியின் லுட்யென்ஸ் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காரை அப்பகுதியில் வேறு ஒரு கார் மிக வேகமாக துரத்தி வருவதை கண்ட ஸ்மிருதி இரானியின் பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு பாதுகாவலர்கள் தகவல் அளித்தனர்.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின் ரோந்து பணி காவலர்கள், வேகமாக வந்த காரை அமெரக்க தூதரக அலுவலகம் அருகே சுற்றி வளைத்தனர். வேகமாக வந்த காரில் டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த நான்கு மாணவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும், ஸ்மிருதி இரானியை பார்த்து, அருவறுக்கத்தக்க செய்கைகளை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  


இரவு முழுக்க காவலில் வைக்கப்பட்ட மாணவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கைது செய்யப்படுவர் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட மாணவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்று திரும்பி கொண்டிருந்தனர் என்றும் டெல்லிக்கு அருகாமையில் உள்ள வசந்த் என்ற கிராமத்தில் கட்டண தங்கும் விடுதியில் தங்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.  


மத்திய மந்திரி என்பதால் அவரது காரை முந்தி கடந்து செல்ல முயன்றதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபடலாம் என கருதப்படுகிறது.