COVID-19: இந்தியாவில் இதுவரை சுமார் 40 டெல்டா பிளஸ் திரிபு வைரஸ் பாதிப்பு
புதிய டெல்டா பிளஸ் திரிபு பாதிப்புகளில் பெரும்பாலானவை மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளா மற்றும் தமிழ்நாட்டிlல் பதிவாகியுள்ளதாக செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
Delta Plus variant : கொரோனா இரண்டாவது அலை பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இப்போது மூன்றாவது அலை குறித்த கவலை அதிகரிக்கும் வகையில், புதிய டெல்டா பிளஸ் (Delta Plus variant) வைரஸ் திரிபு பரவல் கண்டறிப்பட்டுள்ளது.
இரண்டாவது அலைக்கு டெல்டா திரிபு காரணம் என கூறப்பட்ட நிலையில், தற்போது புதிய கோவிட் -19 திரிபான டெல்டா பிளஸ் திரிபு (Delta Plus variant) வைரஸ் தொற்று 40 பேருக்கு ஏற்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த புதிய டெல்டா பிளஸ் திரிபு பாதிப்புகளில் பெரும்பாலானவை மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளதாக என்று அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை (ஜூன் 22), சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் டெல்டா ப்ளஸ் திரிபு பரவல் கவலை அளிக்கு விஷயம் கூறியது.இது தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகம், அறிவுறுத்தல்களை வெளியிட்டு, மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களும், இதனை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தது.
ALSO READ: ஒரேநாளில் 80 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கி இந்தியா சாதனை
டெல்டா பிளஸ் திரிபு வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட மாவட்டங்களில், COVID-19 கட்டுப்படுத்துவது தொடர்பான கடுமையான நடடிக்கைகள், உடனடி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், பரிசோதனையை அதிகரித்தல், தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் ஆகியவற்றை தீவிரப்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
மேலும், "தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும்" என்று நிதி ஆயோக்கின் NITI Aayog சுகாதார பிரிவு உறுப்பினர் வி.கே.பால் கூறினார். டெல்டா பிளஸ் திரிபு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 10 நாடுகளில் இந்தியாவும் (India) ஒன்று என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இந்தியாவைத் தவிர, அமெரிக்கா, இங்கிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, ஜப்பான், போலந்து, நேபாளம், சீனா மற்றும் ரஷ்யாவில் டெல்டா பிளஸ் திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்டா பிளஸ் திரிபு, "தற்போது கவலைக்குரிய திரிபு" என குறிப்பிடப்பட்டுள்ளது. வேகமாக பரவுதல், ஆண்டி பாடி, அதாவது நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்தல் ஆகிய குணாதிசயங்களை கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ALSO READ | COVID-19 தடுப்பூசி மலட்டுத் தன்மையை ஏற்படுத்துகிறதா; சுகாதார அமைச்சகம் கூறுவது என்ன..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR