விஜய் மல்லையா, நீரவ் மோடியின் ₹9,371 கோடி சொத்துக்கள் வங்கிகளிடம் ஒப்படைப்பு: ED

விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோக்சி ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ₹9,371 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்க துறை (ED) வங்கிகளுக்கு வழங்கியுள்ளது.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 23, 2021, 01:08 PM IST
  • நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மெஹுல் சோக்ஸி இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) ₹14,500 மோசடி செய்துள்ளனர்.
  • ஆகியோரின் மோசடிகளால் நஷ்டம் அடைந்த வங்கிகளுக்கு, ₹8,441 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் (ED) மாற்றியது.
விஜய் மல்லையா, நீரவ் மோடியின் ₹9,371 கோடி சொத்துக்கள் வங்கிகளிடம் ஒப்படைப்பு: ED

விஜய் மல்லையா (Vijay Mallya), நீரவ் மோடி (Nirav Modi), மெஹுல் சோக்சி (Mehul Choksi) ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ₹9,371 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்க துறை (ED) வங்கிகளுக்கு வழங்கியுள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) உள்ளிட்ட வங்கிகளிடம் கடன் பெற்று மோசடி செய்ததாக விஜய் மல்லையா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மெஹுல் சோக்ஸி இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) ₹14,500  மோசடி செய்துள்ளனர்.

விஜய் மல்லையா , நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி (Mehul Choksi)  ஆகியோரின் மோசடிகளால் நஷ்டம் அடைந்த வங்கிகளின் பெயரில், ₹8,441 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் (ED) செவ்வாய்க்கிழமை மாற்றியது. தப்பியோடிய மூன்று பேரும் பொதுத்துறை வங்கிகளில், ₹ 22,586 கோடி மோசடி செய்துள்ளனர்.  

அதில் 80.45%  அளவில் , அதாவது ₹18,170 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்க துறையினரால் (ED) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | மெகுல் சோக்ஸி இந்தியாவிற்கு கொண்டு வரப்படுவது எப்போது; அரசு கூறுவது என்ன

செவ்வாய் கிழமை அன்று மாற்றப்பட்ட சொத்துக்கள் மதிப்புடன், இதுவரை, ₹9,371 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன, இது வங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளில் 40% ஆகும் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதில்  ₹329.67 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் அடக்கம் என்று நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டை உலுக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி ₹13,5000 கோடி ஊழல் (PNB Scam) வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தப்பியோடிய வைர வர்த்தகர் மெகுல் சோக்ஸியை  (Mehul Choksi)  விசாரணைக்காக இந்தியா அழைத்து வர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ALSO READ | PNB வங்கி மோசடி: ஆன்டிகுவாவில் இருந்த மெகுல் சோக்ஸியை காணவில்லை

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News