போலி செய்திகளை அறிய FB-யுடன் ஆதார் இணைக்க வேண்டும்: SC
முகநூளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
முகநூளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
போலி, அவதூறு மற்றும் ஆபாச உள்ளடக்கங்கள் தேசிய மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் பொருட்களின் புழக்கத்தை சரிபார்க்க பயனர்களின் சமூக ஊடக சுயவிவரங்களை ஆதார் எண்களுடன் இணைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
‘முகநூல்’ சமூக வலைத்தள நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், “முகநூல் சமூக வலைத்தளத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் சென்னை, மும்பை உள்ளிட்ட ஐகோர்ட்டுகளில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் மட்டுமே விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வலக்கை விசாரித்த நீதிபதிகள், “தனிமனித அந்தரங்கம் தொடர்பான உரிமை மற்றும் ஆன்லைன் குற்றங்களை தடுக்கும் அரசின் கடமை என்ற இரண்டுக்கும் இடையில் எப்போதும் முரண்பாடுகள் தொடர்கின்றன. எனவே இவை இரண்டுக்கும் இடையில் சமமான தன்மையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது” என்று கூறினர். இது தொடர்பான வழக்குகள் நடைபெற்று வரும் உயர்நீதி மன்றங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதிக்குள் இந்த நீதிமன்றங்கள் பதில் மனு தாக்கல் செய்யவும், மத்திய அரசு, மற்றும் கூகுள், டுவிட்டர், யூடியூப் ஆகிய சமூக வலைத்தளங்களும், செயலிகளின் நிர்வாகமும் இது தொடர்பான தங்கள் எதிர்வினையை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தனர். சென்னை உயர்நீதி மன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் இது தொடர்பான வழக்கு விசாரணை தொடரலாம் என்றும், ஆனால் அந்த வழக்கில் முக்கியமான உத்தரவுகள் எதையும் சென்னை ஐகோர்ட்டு தற்போதைக்கு பிறப்பிக்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.