புது டெல்லி: புதிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி) தேர்தல் நடைபெற்று புதிய கட்சித் தலைவர் ஒருவர் தேர்வு செய்யப்படும் வரை காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி (Sonia Gandhi) தொடருவார் என்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 24) நடைபெற்ற காரிய கமிட்டி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸ் தலைவர் பி.எல்.பூனியா (PL Punia ) ஏ.என்.ஐ யிடம் அடுத்த கூட்டம் விரைவில் அழைக்கப்படும் என்று கூறினார், அநேகமாக ஆறு மாதங்களுக்குள் புதிய தலைவர் தேர்ந்தெடுப்பார். கட்சி உறுப்பினர்கள், சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது நம்பிக்கை இருக்கிறது, கட்சியை தொடர்ந்து வழிநடத்துமாறு அவர் வலியுறுத்தினார்.


தலைமை மீது சந்தேகம் எழுப்பிய ஒரு சில கட்சி உறுப்பினர்கள் தனக்கு அனுப்பிய கடிதம் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய சோனியா, "எனக்கு வேதனை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் என் சகாக்கள், எனவே அதை மறந்துவிட்டு, அனைவரும் ஒன்றாக வேலை செய்யலாம்" என்று கூறியதாக சொல்லபடுகிறது. அடுத்த கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஏ.ஐ.சி.சி அமர்வு நடத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.


ALSO READ | நாட்டில் எழுத, பேச, கேள்விகளைக் கேட்க சுதந்திரம் உள்ளதா? - சோனியா காந்தி


கட்சி தலைமைப் பிரச்சினை தொடர்பாக கட்சியில் ஏற்பட்ட பிளவுகளுக்கு இடையே திங்களன்று நடைபெற்ற ஏழு மணி நேர காங்கிரஸ் (Congress) செயற்குழு கூட்டம் இதற்கிடையில், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.


"சோனியா காந்தி தொடர வேண்டும், தேர்தல் விரைவில் நடைபெறும், இது செயற்குழுவின் ஒருமித்த முடிவு. தலைமை குறித்து வேறுபட்ட கருத்து இல்லை. தலைமை குறித்த எந்தவொரு சர்ச்சையும் இல்லை" என்று காங்கிரஸ் தலைவரும், சி.டபிள்யூ.சி உறுப்பினருமான கே.எச். முனியப்பா ANI இடம் கூறினார்.


ALSO READ | நாட்டில் எழுத, பேச, கேள்விகளைக் கேட்க சுதந்திரம் உள்ளதா? - சோனியா காந்தி


மறுபுறம், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பூபெல் ஆகியோர் ராகுலை முழுநேர கட்சித் தலைவராக நியமிக்குமாறு சி.டபிள்யூ.சி-யிடம் (Congress Working Committee) கோரியுள்ளனர்.