தென்னாப்ரிக்காவில் மகாத்மா காந்தியின் அரசியல் பாதைக்கு அஸ்திவாரமிட்ட நிறவெறி சம்பவம் நடந்த ரயில் பாதையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் செய்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 1893-ம் ஆண்டு தென்னாப்ரிக்காவின் பிரிட்டோரியாவில் நிற வெறி காரணமாக மகாத்மா காந்தி ரயிலில் இருந்து வெளியே தள்ளிவிடப்பட்டார். இதுதான், ஆங்கிலேயர்களின் நிறவெறிக்கு எதிராகவும், அடக்குமுறைக்கு எதிராகவும் காந்தியை போராட தூண்டியது. 


4 நாடுகள் பயணத்தின் ஒரு அங்கமாக தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மகாத்மா காந்தி ஆங்கிலேயர்களால் இறக்கி விடப்பட்ட வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில் காந்தி பயணித்த அதே ரயில் பாதையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொண்டார்.