லக்னோ: உத்தரபிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி மற்றும் ஆர்எல்டி கட்சிகள் கூட்டணி அமைக்கப் போவதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தன. தொகுதி பங்கீடு தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடும் ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மொத்தம், 191 இடங்களுக்கு SP மற்றும் RLD (Rashtriya Lok Dal) தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. சமாஜ்வாதி கட்சி (Samajwadi Party) வெளியிட்ட 159 வேட்பாளர்கள் பட்டியலில் கர்ஹால் தொகுதியில் அகிலேஷ் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தலில் எந்த சாதிக்கு இந்த கூட்டணியில் எத்தனை சீட்டுகள் கிடைத்தன என்பதை தெரிந்துக் கொள்வோம்...


159 SP வேட்பாளர்களில் எந்த சாதியிலிருந்து எத்தனை வேட்பாளர்கள்?
OBC- 66 (யாதவ்- 20, யாதவர் அல்லாத OBC- 46)
தலித் - 32
முஸ்லிம் - 31
பிராமணர் - 11
வைஷ்யா / காயஸ்தா - 9
தாக்கூர் - 5
சீக்கியர் - 3
மற்றவை - 2


ALSO READ | 25 ஆயிரம் வாக்காளர்கள் இறுதியாக வாக்களிக்கவிருக்கும் 11 கிராமங்கள்


RLD, 32 இடங்களுக்கான தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது
OBC- 13 (ஜாட்-9, குர்ஜார்-3, சைனி- 1)
தலித் - 8
முஸ்லிம் - 5
பிராமணர் - 3
தாக்கூர் - 2
பனியா - 1


32 RLD வேட்பாளர்களில் 5 SP சின்னத்தில் போட்டியிடுவார்கள்
ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் (Rashtriya Lok Dal) 32 வேட்பாளர்களில், 5 SP வேட்பாளர்கள் RLD சின்னத்தில் களம் இறங்குகின்றனர். மொத்தத்தில், SP (Samajwadi Party) மற்றும் RLD கூட்டணி இதுவரை 191 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 


முன்னதாக, கடந்த வியாழன் அன்று, RLD-SP கூட்டணி 29 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும், RLD தேசிய தலைவர் ஜெயந்த் சவுத்ரி, இதுகுறித்து ட்வீட் செய்திருந்தார்.


'இந்த வேட்பாளர்களின் தேர்தலில் கூட்டணியின் அனைத்து தொண்டர்களும் ஒன்றிணைந்து முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன்! உங்கள் சட்டமன்றம், உங்கள் அரசாங்கம் அமைவதற்கு ஒவ்வொரு எம்.எல்.ஏ.வின் வெற்றியும் முக்கியமானது' என்று RLD தேசிய தலைவர் ஜெயந்த் சவுத்ரி வேட்பாளர்களுக்கு ஊக்கம் கொடுத்திருந்தார்.  


ALSO READ | வெறுப்புபேச்சால் இந்துக்களை அவமதிக்கும் ஒவைசி! உச்ச நீதிமன்றத்தில் PIL


SP-RLD கூட்டணியில் எந்த சாதியிலிருந்து எத்தனை வேட்பாளர்கள்?
OBC- 79 (20 யாதவ் மற்றும் 59 யாதவ் அல்லாத OBC)
தலித் - 41
முஸ்லிம் - 36
பிராமணர் - 14
பனியா / காயஸ்தா - 10
தாக்கூர் - 7
சீக்கியர் - 3
மற்றவை - 2


ALSO READ | மாறும் தேர்தல் களம்! முலாயம் சிங்கின் மருமகள் அபர்ணா யாதவ் பிஜேபியில்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR