Election 2022: 25 ஆயிரம் வாக்காளர்கள் இறுதியாக வாக்களிக்கவிருக்கும் 11 கிராமங்கள்

பல சுவாராசிமான விஷயங்களும், திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்டதாக இருக்கும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு வித்தியாசமான செய்தி இது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 22, 2022, 06:54 AM IST
  • 25 ஆயிரம் வாக்காளர்களை இறுதியாக காணும் வாக்குச்சாவடிகள்
  • இறுதித் தேர்தல் காணும் கிராமங்கள்
  • 25 ஆயிரம் வாக்காளர்கள் வசிக்கும் 11 கிராமங்களின் கதை
Election 2022: 25 ஆயிரம் வாக்காளர்கள் இறுதியாக வாக்களிக்கவிருக்கும் 11 கிராமங்கள் title=

புதுடெல்லி: சில வாரங்களில் 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது.

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஐந்து மாநிலங்களையும் இணைத்து மொத்தம் 7 கட்டங்களில் தேர்தல்கள் நடைபெறவுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் (UP Elections) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பல சுவாராசிமான விஷயங்களும், திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்டதாக இருக்கும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு வித்தியாசமான செய்தி இது.

11 கிராமங்கள், 25 ஆயிரம் வாக்காளர்கள் பங்கேற்கும் கடைசித் தேர்தல் இது, 

ALSO READ | முலாயம் சிங்கின் மருமகள் அபர்ணா யாதவ் பிஜேபியில்

உத்தரபிரதேச மாநிலத்தின் சோம்பத்ரா மாவட்டத்தில் உள்ள இந்த கிராமங்கள் அமைந்திருக்கும் பகுதியில், நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் அணை கட்டப்பட்டு வருகிறது. இந்த அணை கட்டும் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடைந்துவிடும்.

அணையின் பணிகள் பூர்த்தியான பிறகு இந்த கிராமங்கள் இருக்கும் பகுதி அணையாகிவிடும். கிராமங்கள் இருக்காது. இந்த கிராமங்களில் வசிக்கும் 25 ஆயிரம் வாக்காளர்களும், தங்கள் குடும்பத்துடன் வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்துவிடுவார்கள்.

அந்த நிலையில், இந்த கிராமங்களின் மக்களாக, இந்த 25 ஆயிரம் வாக்காளர்கள் (UP Elections) வாக்களிக்க முடியாது. குடியேறப்போகும் புது இடத்தில் வாக்களிப்பார்கள்.
அதாவது இந்தியாவின் இந்த 11 கிராமங்களின் கடைசித் தேர்தல் இதுதான். 

ALSO READ | தேர்தல் பேரணிகள், சாலை நிகழ்வுகளுக்கான தடை

வீட்டை விட்டு வெளியேறும் வலி
1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அணைத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இங்கு வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும், அவர்களின் நிலத்திற்கு பதிலாக தலா 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நஷ்டஈடு பல பாகங்களாக வழங்கப்பட்டதாகவும், மூன்று தலைமுறைகள் மாறிவிட்டதாகவும் மக்கள் கூறுகின்றனர். இருந்தாலும், தற்போது அணையின் கட்டுமானப் பணிகள் இறுதிகட்டத்திற்கு வந்துவிட்டதால், இந்த 11 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பூர்வீக கிராமத்தில் கடைசியாக வாக்களிக்க ஆர்வமாக உள்ளனர். 

ஆனால் வீட்டையும், நிலத்தையும் விட்டுப் பிரியும் வலி அவர்களின் மனதில் இருக்கிறது. ஆனாலும், புதிய அணையால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் செழிப்பும் வளமையும் ஏற்படும் என்று மக்கள் நம்புகின்றனர்.

அதே செழிப்பை தங்கள் வாழ்க்கையில் கொண்டு வரும் வகையில் புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பதும் அந்த மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ALSO READ | பிரதமர் மோடி மீண்டும் பஞ்சாப் வருவார் என்று எதிர்பார்க்கும் பஞ்சாப் முதலமைச்சர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News