படிப்பில் சுட்டி, கல்வி கற்பதில் கில்லாடி, அனைவரின் செல்ல மகள் என பலரது அன்புக்குப் பாத்திரமான சுப்ரியா, தன் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகளுக்காக ஆவலோடு காத்திருந்தார். ஹரியாணாவைச் சேர்ந்த சுப்ரியா ஒரு மாற்றுத் திறனாளி (Specially Abled) . ஆனால் முடிவுகள் வந்ததும் அவரால் அதை, குறிப்பாக தன் கணித பாடத்தின் மதிப்பெண்களை நம்ப முடியவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓரளவு கண் பார்வையே கொண்டுள்ள சுப்ரியா தனது விடைத் தாள் ஒழுங்கான முறையில் திருத்தப்படவில்லை என குற்றம் சாட்டுகிறார். இதன் விளைவாக அவருக்கு கணக்குப் பாடத்தில் 2 மதிப்பெண்கள் மட்டுமே வந்திருந்தன. எனினும், மறு மதிப்பீட்டிற்குப் பிறகு அவருக்கு 100 மதிப்பெண்கள் வந்தன.


"கணித தேர்வில் எனக்கு 2 மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. நான் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தேன். எனது தந்தை மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தார். மறு மதிப்பீட்டிற்குப் பிறகு எனக்கு 100 மதிப்பெண்கள் கிடைத்தன. இது போல் இனி வேறு எந்த மாற்றுத் திறனாளி மாணவருடனும் நடக்கக்கூடாது என நான் போர்டிடம் கேட்டுக்கொள்கிறேன்” என சுப்ரியா ஊடகங்களிடம் தெரிவித்தார். சுப்ரியாவின் தந்தை சஜ்ஜுராம், சுப்ரியா அனைத்துப் பாடங்களிலும் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருந்ததாகவும், கணிதத்தில் மட்டும் 2 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்ததாகவும் தெரிவித்தார். இதனால் அவர் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தார்.


ALSO READ: அண்ணாவின் பேத்தி ப்ருத்திகா ராணிக்கு UPSC தேர்வுகளில் 171 ஆவது Rank!!


"மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் செயல்முறையில் நான் 5,000 ரூபாய் செலவிட்டேன். நான் ஒரு கணித ஆசிரியர். என் மகள் கணிதத்தைத் தவிர அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றாள். அவருடைய கணித மதிப்பெண்ணை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. எனவே மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தேன். பின்னர் மதிப்பெண் வந்த பிறகு என் மகளது உண்மையான மதிப்பெண் 100 என்பது தெரிய வந்தது" என்று அவர் கூறினார்.


பள்ளி மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் சுப்ரியா கௌரவிக்கப்படுவார் என்று ஹிசார் அரசு மூத்த மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ஹிருஷிகேஷ் குண்டு தெரிவித்தார்.


"சுப்ரியா ஒரு கடின உழைப்பாளி. அவர் மிக நன்றாகப் படிப்பவர். பள்ளி மீண்டும் திறக்கப்பட்ட பிறகு நாங்கள் அவரை கௌரவிப்போம்" என்று அவர் கூறினார். ஹரியானாவின் பள்ளி கல்வி வாரியம் (BSHE) ஜூலை 10 அன்று தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 2020 ஆம் ஆண்டின் 10 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகளை அறிவித்தது.


ALSO READ: BIG NEWS! ஆகஸ்ட் 10 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்!!