பிரதமர் மோடியின் கேதார்நாத் யாத்திரை குறித்து குறைகூறும் எதிர்கட்சியினரால் கேதார்நாத் குகையில் ஒருநாள் தியானம் செய்ய முடியுமா என உத்தரகண்ட் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எதிர்கட்சிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தாலும், கேதார்நாத் குகையில் தங்க அவர்களால் முடியாது., என குறிப்பிட்டு பேசிய உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மோடியின் யாத்திரை குறித்து குறை கூற எதிர்கட்சியினருக்கு தகுதி இல்லை எனவும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.


மக்களவை தேர்தலில் இறுதி கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்ததும், பிரதமர் மோடி கேதார்நாத் சென்று, பழமையான சிவன் கோவிலில் தரிசனம் செய்தார். காவி உடையணிந்து, அங்குள்ள குகையில் சுமார் 17 மணி நேரம் தியானம் செய்தார். 


கேதார்நாத்தில் குகைக்கு வாடகையாக ஒரு நாளைக்கு, 990 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு, மூன்று வேளை உணவு, படுக்கை, உதவியாளர் உள்ளிட்ட வசதி செய்து தரப்படும். 


ஆனால் வசதிகள் அனைத்தையும் தவிர்த்து, குகையில் மோடி தியானம் செய்தார். ஆனால் எதிர்கட்சியினர் குகையில் தியானம் செய்த மோடியை விமர்சனம் செய்து வருகின்றனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300-க்கும் அதிகமான இடங்களை கைபற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் தெரிவித்து வருகின்ற. இதை ஏற்க முடியாத எதிர்கட்சியினர் இவ்வாறு மோடியின் மீது அவதூறு பரப்பி வருகின்றனர் என திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.


மேலம் பிரதமர் மோடி, கேதார்நாத் குகையில் தியானம் செய்ததை, சிலர் கிண்டலடிக்கின்றனர். அவர்களுக்கு சவால் விடுகிறேன். தேவையான வசதிகளை செய்து தருகிறோம். உங்களால், ஒரு நாள், அந்த குகையில் தங்கி, தியானம் செய்ய முடியுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.