முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்தியா மீதான தனது நாட்டத்தையும் ஈர்ப்பையும் தனது சமீபத்திய புத்தகமான 'A Promised Land’-ல் பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தோனேசியாவில் (Indonesia) தனது குழந்தைப் பருவம் கழிந்ததாகவும் அங்கு புகழ்பெற்ற காவியங்களான ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் கேட்டு தான் வளர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் இந்தியா எப்போதும் தனக்கு ஒரு சிறப்பம்சம் வாய்ந்த நாடாக இருந்துள்ளது என்றும் பராக் ஒபாமா (Barack Obama) குறிப்பிட்டுள்ளார்.


‘எ ப்ராமிஸ்ட் லாண்ட்’ என்ற அவரது சுயசரிதை ஒரு தனித்துவமான, வித்தியாசமான வேளையில் வெளிவந்துள்ளது. உலகம் முழுவதும் நிலையற்ற தன்மை உள்ளது. ஆழ்ந்த அரசியல், கலாச்சார மற்றும் சமூக அமைதியின்மை - உலகளாவிய தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடியால் அதிகரித்துள்ள பதட்டங்கள் உலகை சூழந்துள்ள இந்த வேளையில் ஒபாமாவின் சுயசரிதை வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ: ராகுல் காந்தி ஒரு பக்குவப்படாத தலைவர்: Barack Obama


"இந்தோனேசியாவில் எனது குழந்தைப் பருவத்தின் ஒரு பகுதியை ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் இந்து காவிய கதைகளைக் கேட்டு கழித்தேன். கிழக்கத்திய நாடுகளின் மதங்களில் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த எனது நண்பர்கள் எனக்கு பருப்பு வகைகள், கீமா ஆகிய உணவுகளை சமைக்கவும், பாலிவுட் படங்கள் பார்க்கவும் கற்றுக்கொடுத்தார்கள். இவை அனைத்தின் காரணமாகவும் இந்தியா மீதான் எனது ஈர்ப்பு அதிகரித்திருக்கலாம்” என்று ஒபாமா எழுதியுள்ளார்.


"உலக மக்கள்தொகையில் ஆறில் ஒரு பகுதியாக இருக்கும் இந்தியாவின் மக்கள்தொகை, சுமார் இரண்டாயிரம் இனக்குழுக்கள், ஏழுநூறுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவது ஆகியவையும் இந்தியா மீதான நாட்டம் அதிகரிக்க காரணமாக இருக்கலாம்.” என்று ஒபாமா கூறியுள்ளார்.


2010 ல் அமெரிக்க அதிபராக அரசு முறைப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பு தான் இந்தியாவிற்கு சென்றதில்லை என்றும், இருப்பினும், இந்தியா தனது கற்பனையில் எப்போதும் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்திருந்தது என்றும் அவர் எழுதியுள்ளார்.


"எனது புத்தகம் இளைஞர்களுக்கானது - உலகத்தை மீண்டும் அமைப்பதற்கான அழைப்பு, கடின உழைப்பு, உறுதிப்பாடு மற்றும் ஒரு பெரிய அளவிலான கற்பனையின் மூலம், இறுதியாக நம்மில் உள்ள சிறந்த அம்சங்கள் அனைத்தையும் நாம் ஒன்றிணைத்து ஒரு புதிய அமெரிக்காவை (America) உண்டாக்க வேண்டும்” என்று ஒபாமா கூறியுள்ளார்.


768 பக்கங்களைக் கொண்ட தனது சுயசரிதையின் முதல் பகுதியில், அமெரிக்காவின் 44 ஆவது அதிபர் ஒபாமா, தான் கணிணியில் டைப் செய்வதற்கு பதிலாக, ஒரு மஞ்சள் நிற நோட்டு புத்தகத்தில் கையால் எழுதுவதாகவும், தனக்கு சுருக்கமாக எழுத தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். 


ALSO READ: பாஜக-வுடன் கை கோர்க்கப்போகிறாரா அழகிரி? உச்சத்தில் ஊகங்கள், சூடி பிடிக்கும் தேர்தல் களம்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR