JetAirways நிறுவனம் நிதி நெருக்கடியால் ஒரு பக்கம் தங்களது விமானத்தை எப்படி இயக்குவது என தெரியாமல் விழித்து வருகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து குத்தகை அடிப்படையில் வாங்கி இயக்கும் பல விமானங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்த முடியாமல் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கடன் வைத்துள்ளது.  நூற்றுக்கும் அதிகமான விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் பல விமானங்களை இயக்காமலும் நிறுத்தி விட்டது.


போதிய நிதி இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத ஊதியத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.


சுமார் 8,000 கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திக்குமுக்காடி வருகிறது. மீண்டும் தலை நிமிரும் வகையில் புத்துயிர் அளிக்க 10,000 கோடி ரூபாய்வரை தேவைப்படுகிறது. இதற்கிடையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் 17-ஆம் நாள் முதல் தற்காலிகமாக அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.


Jet Airways முடக்கதால் தற்போது விமான போக்குவரத்து சேவைக்கு பற்றாகுறை ஏற்பட்டுள்ள இந்தியாவில், விமான போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் Spice Jet 28 புதிய விமானங்களை களமிறக்கவுள்ளதாக தெரிகிறது. அதன்படி வரும் ஏப்ரல் 26-ஆம் நாள் முதல் டெல்லி முதல் மும்பை வரை பல நகரங்களை இணைக்கும் விதமாக 28 புதிய விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது.


மேலும் புதுச்சேரி – பெங்களுரு இடையிலான ஜெட் விமான சேவையினை வாரம் இருமுறை நிறுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. அதேவேலையில் ஹைதராபாத்திலிருந்து புதுச்சேரி வரும் விமான சேவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை


பராமரிப்பு காரணங்களுக்காக செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வாரம் இருமுறை நிறுத்தப்படும் இந்த திடீர் மாற்றத்திற்கு விளக்கமளித்துள்ளது. எனினும் நாடுமுழுவதும் துவங்கப்படவுள்ள புதிய விமான சேவைகளுக்காக புதுச்சேரி - பெங்களூரு இடையே இந்த சேவை மாற்றம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.